search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆம்பூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தொற்றுக் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வரும் காட்சி.
    X
    ஆம்பூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தொற்றுக் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வரும் காட்சி.

    ஆம்பூரில் 20 பேருக்கு கொரோனா தொற்று

    ஆம்பூரில் பெண் சப்-இன்ஸ்பெக்டர் உட்பட 20 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்ப்பட்டுள்ளது.
    ஆம்பூர்:

    ஆம்பூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் பெண் எஸ்ஐ ஒருவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. 

    இதையடுத்து அவர் திருப்பத்தூர் அரசு மருத்துவ மனையில் பரிசோதனை செய்து செய்து கொண்டார். முடிவு நேற்று வெளியான நிலையில் அவருக்கு தொற்று உறுதியானது.

    இதையடுத்து ஒரே கட்டிடத்தில் இயங்கி வரும் அனைத்து மகளிர் மற்றும் ஆம்பூர் தாலுகா போலீஸ் நிலையங்களில் நகராட்சி தூய்மை ஆய்வாளர் ராஜேந்திரன் தலைமையிலான குழு கிருமி நாசினி தெளித்து.

    மேலும் இதில் போலீஸ் நிலையங்களில் பணிபுரியும் அனைத்து போலீசுக்கும் இன்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ள உள்ளது.

    இதை தொடர்ந்து ஆம்பூரில் நேற்று வெளியான கொரோன பரிசோதனை முடிவுகளில் 7 பேர் மாதனூர் ஒன்றியத்தில் 11 பேர் மொத்தம் 20 பேருக்கு இதில் ஆம்பூரில் 8-வது தெருவில் வசிக்கும் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேருக்கும் தொற்று உறுதியானது. 

    இதனால் அங்கு தடுப்பு அமைத்து கட்டுப்படுத்தப்பட்டுள்ளது பகுதியாக அறிவிக்கப் பட்டுள்ளது.
    Next Story
    ×