search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பூஸ்டர் தடுப்பூசி போடும் பணியை கலெக்டர் கார்மேகம் தொடங்கி வைத்த காட்சி. அருகில் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. மேலும்
    X
    பூஸ்டர் தடுப்பூசி போடும் பணியை கலெக்டர் கார்மேகம் தொடங்கி வைத்த காட்சி. அருகில் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. மேலும்

    சேலத்தில் முன்களப் பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி தொடக்கம்

    சேலத்தில் முன்களப் பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடும் பணியை கலெக்டர் கார்மேகம் தொடங்கிவைத்தார்.
    சேலம்:

    சேலம் அரசு ஆஸ்பத்திரி கல்லூரி மருத்துவ மனையில் பூஸ்டர் தடுப்பூசி முகாம்  இன்று தொடங்கியது. இதனை கலெக்டர் கார்மேகம் தொடங்கி வைத்தார். 

    தொடர்ந்து முன்களப்பணியாளர்கள் இந்த தடுப்பூசியை போட்டு கொண்டனர்.
     2&ம் தவணை தடுப்பூசி செலுத்தி 9 மாதம் இல்லையெனில் 39 வாரம் முடிந்த அனைத்து சுகாதார பணியாளர், முன் கள பணியாளர் மற்றும்  60 வயதான இணை  நோய்   உள்ளவர்களுக்கும் 3&வதாக முன் எச்சரிக்கை   தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.

    கோவாக்சின்,கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தியிருந்தால்  அதே வகை தடுப்பூசி, தகுதி உள்ள பயனாளிகளுக்கு போடப்படும்.   

    உருமாறிய கெரோனா ஓமைக்ரான் தொற்றாக பரவி வருவதால்   தினமும்   பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.  அதனால் தடுப்பூசி செலுத்தி தொற்றின் தீவிரத்தில் இருந்து அனைவரும் பாதுகாத்து கொள்ள வேண்டும் என்று கலெக்டர் கார்மேகம் கூறி உள்ளார். 

    நிகழ்ச்சியில் எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி., ராஜேந்திரன் எம்.எல்.ஏ. டீன்.வள்ளி சத்தியமூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×