search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பல்லடம் வழியாக பழனி மலைக்கு பாதயாத்திரை சென்ற பக்தர்கள்.
    X
    பல்லடம் வழியாக பழனி மலைக்கு பாதயாத்திரை சென்ற பக்தர்கள்.

    கொரோனா கட்டுப்பாடுகளால் பழனிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் கூட்டம் குறைந்தது

    கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்கள் கோவில்களில் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
    பல்லடம்:

    உலகப்புகழ்பெற்ற முருகன் திருத்தலமான பழநி மலைக்கு தைப்பூச விழாவுக்கும்,பங்குனி உத்திரத்திற்கும் பாதயாத்திரையாக தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் செல்கின்றனர். 

    திருப்பூர்,கோவை மாவட்டங்களிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பாத யாத்திரையாக சென்று வந்த நிலையில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்கள், கோவில்களில் பக்தர்களுக்கு தமிழக அரசு விதித்த கட்டுப்பாடு காரணமாக பழநிமலைக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் கூட்டம் கணிசமாக குறைந்தது.

    இதுகுறித்து முருக பக்தர் சின்னகாளிபாளையம் ஈஸ்வரன் கூறியதாவது:

    தைப்பூசத்திற்காக காவடி எடுத்து ஆயிரக்கணக்கானோர் பழனி மலைக்குச் சென்று வந்தோம். இந்த நிலையில் அரசின் திடீர் அறிவிப்பால் பழநி மலைக்கு செல்வதை பலர் தள்ளி வைத்துள்ளனர். 

    இந்த நிலையில் ஏற்கனவே பாத யாத்திரையாக சென்றவர்கள் அரசின் உத்தரவு காரணமாக வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்கள், கோவிலுக்குள் அனுமதிக்கப்படாமல் அங்கேயே தங்கியிருந்து விரதத்தை முடிக்க வேண்டிய நிலை உள்ளது .

    பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் நேர்த்திக்கடனை நிறைவேற்ற பல மைல் தூரம் பாதயாத்திரை மேற்கொண்டு வருபவர்களுக்கு அரசின் இந்த திடீர் உத்தரவு வேதனையை ஏற்படுத்துவதாக உள்ளது. பொங்கல் பண்டிகையின் போது கூடுதலான பக்தர்கள் பழனி மலைக்கு வருவார்கள். 

    அந்த நேரத்தில் அங்கு அதிக அளவிலான பக்தர்கள் ஒரே நேரத்தில் ஒன்று கூடும் அபாயமும் உள்ளது. எனவே அரசு இந்த உத்தரவு குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
    Next Story
    ×