search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்த காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள்
    X
    கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்த காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள்

    தமிழகம் முழுவதும் கவர்னருக்கு அனுப்ப கலெக்டர் அலுவலகங்களில் காங்கிரசார் மனு

    சென்னை மாவட்ட கலெக்டரிடம் காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் ரஞ்சன் குமார், டில்லி பாபு, நாஞ்சில் பிரசாத், சிவராஜசேகர், எம்.ஏ.முத்தழகன், எம்.எஸ்.திரவியம், அடையாறு துரை ஆகியோர் மனு அளித்தனர்.
    சென்னை:

    பிரதமர் மோடி பஞ்சாப் மாநிலத்துக்கு சுற்றுப்பயணம் செய்தபோது விவசாயிகள் போராட்டம் காரணமாக நடுவழியில் திரும்ப வேண்டிய சூழல் ஏற்பட்டது.

    அதிமுக்கிய பிரமுகர் பாதுகாப்பில் மிகப்பெரிய தவறு நிகழ்ந்துள்ளதாக பஞ்சாப் காங்கிரஸ் அரசு மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சகம், பாதுகாப்பு அமைச்சகம் ஆகியவை இது தொடர்பாக விளக்கம் கேட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட்டும் இதை விசாரித்து வருகிறது.

    ஆனால் பஞ்சாப் மாநில காங்கிரஸ் அரசு மீது திட்டமிட்டு பழி சுமத்தப்படுவதாக காங்கிரஸ் கூறி வருகிறது.

    இது தொடர்பாக இன்று உண்மை நிலையை விளக்கி தமிழகம் முழுவதும் கவர்னருக்கு அனுப்ப கோரி அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலும் காங்கிரஸ் சார்பில் மனு அளிக்கப்படும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி அறிவித்து இருந்தார்.

    அதன்படி இன்று அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகங்களிலும் மனு அளித்தனர். சென்னை மாவட்ட கலெக்டரிடம் மாவட்ட தலைவர்கள் ரஞ்சன் குமார், டில்லி பாபு, நாஞ்சில் பிரசாத், சிவராஜசேகர், எம்.ஏ.முத்தழகன், எம்.எஸ்.திரவியம், அடையாறு துரை ஆகியோர் மனு அளித்தனர்.

    பஞ்சாப் மாநிலத்தில் தேர்தல் நடைபெற உள்ள சூழலில் அரசியல் ஆதாயம் தேடுவதற்காக பிரதமர் மோடியின் பயணம் அரசியல் நாடகமாக அரங்கேற்றப்பட்டுள்ளது.

    பிரதமரின் பாதுகாப்பு என்பது மத்திய அரசின் சிறப்பு பாதுகாப்பு படையின் பொறுப்பு. பதின்டா விமான நிலையத்தில் இருந்து 122 கிலோ மீட்டர் தூரம் காரில் பயணிக்க எப்படி ஒத்துக்கொண்டார்கள்? பிரதமரின் கார் செல்வதற்கு 5 நிமிடங்களுக்கு முன்பு பைலட் கார் செல்வது வழக்கம். அப்படி சென்றிருந்தால் நிலைமையை உடனடியாக தெரியப்படுத்தாது ஏன்?

    20 நிமிடம் பிரதமரின் கார் நின்றபோது ஏராளமான பா.ஜனதாவினர் அருகில் சென்றுள்ளார்கள். அதை எப்படி அனுமதித்தார்கள்?

    பிரதமரை கொல்ல நடந்த முயற்சி என்பது அப்பட்டமான பொய். உண்மையை மூடி மறைக்க முடியாது. எனவே உண்மையை கண்டறிந்து நாட்டு மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறி உள்ளனர்.

    Next Story
    ×