search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சார்பு ஆய்வாளர் சதீஸ் இலவசமாக உணவு வழங்கினார்
    X
    சார்பு ஆய்வாளர் சதீஸ் இலவசமாக உணவு வழங்கினார்

    மனநலம் பாதித்தவர்களுக்கு இலவச உணவு வழங்கிய சார்பு ஆய்வாளர்

    ராமேசுவரத்தில் முழு ஊரடங்கு தினத்தில் உணவின்றி தவித்த மனநலம் பாதித்தவர்களுக்கு சார்பு ஆய்வாளர் இலவசமாக உணவு வழங்கினார்
    ராமேசுவரம்

    கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்காக தமிழக அரசு இன்று முழு ஊரடங்கு  அறிவித்துள்ளது.  

    ராமேசுவரம் ராமநாதசுவாமி  கோவில் உலக பிரசித்தி பெற்ற   ஆன்மீக தலம் என்பதால் இங்கு வரும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளை நம்பி கோவிலை சுற்றி சுமார் 100க்கும் மேற்பட்ட பிச்சைக்காரர்கள் வசித்து வருகின்றனர். 

    இவர்கள் இந்த முழு ஊரடங்கால் உணவின்றி தவித்தனர். இதனை அறிந்த  ராமேசுவரம் நகர் காவல்  சார்பு ஆய்வாளர் சதீஸ்  பிச்சைக்காரர்களையும், மனநலம் பாதிக்கபட்டவர்களையும் தேடி சென்று   உணவு அளித்தார்.   

    கடந்த ஊரடங்கு காலத்தில் 100க்கும் மேற்பட்ட நாட்களில் தனது சொந்த செலவில்  உணவு வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×