search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூர் காந்திநகர் சந்தையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த  மீன்கள்.
    X
    திருப்பூர் காந்திநகர் சந்தையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த மீன்கள்.

    இறைச்சி கடைகளில் குவிந்த பொதுமக்கள்

    வழக்கமாக ஞாயிற்றுக்கிழமைகளில்தான் இறைச்சி விற்பனை மும்முரமாக நடை பெறும்.
    திருப்பூர்:

    அதிகரித்து வரும் கொரோனாவை கட்டுப்படுத்த நாளை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள், ஷாப்பிங் மால்கள், தியேட்டர்கள் மூடப்படுகின்றன. ஓட்டல் களில் பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட் டுள்ளது.

    இதேபோல இறைச்சி கடைகளும் மூடப்படுகின்றன. வழக்கமாக ஞாயிற்றுக்கிழமைகளில்தான் இறைச்சி விற்பனை மும்முரமாக நடைபெறும். ஆடு, கோழி, மீன் ஆகிய இறைச்சி கடைகளில் கூட்டம் அலை மோதும்.

    இந்த நிலையில் நாளை இறைச்சி கடைகள் முழு வதுமாக மூடப்படுவதால் அசைவ பிரியர்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகிறார்கள். அதனால் அவர்கள் இன்றே இறைச்சிகளை வாங்கி இருப்பு வைக்கிறார்கள்.

    இதனால் திருப்பூர் மாவட்டத்தில் ஆடு, கோழி, மீன் ஆகிய இறைச்சி கடைகளில் இன்று காலை முதலே கூட்டம் அலை மோதியது. நீண்ட வரிசை காணப்பட்டது. காலை 6 மணிக்கெல்லாம் இறைச்சி கடைகளில் மக்கள் குவிந்தனர்.
    Next Story
    ×