search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பள்ளி மைதானத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்கள்.
    X
    பள்ளி மைதானத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்கள்.

    பள்ளி மைதானத்தில் உள்ள வாகனங்களை அப்புறப்படுத்த வேண்டும்

    திருக்காட்டுப்பள்ளி மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை உடனே அப்புறப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    பூதலூர்:

    திருக்காட்டுப்பள்ளி காவல் நிலையத்திற்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கு முன்பாக, சில வருடங்கள் அருகில் உள்ள மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள கட்டிடம் ஒன்றில் செயல்பட்டு வந்தது.

    அப்போது போலீசாரால் கைப்பற்றப்பட்ட லாரிகள், மினி வேன்கள், மாட்டு வண்டிகள் ஆகியவற்றை அந்த பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் நிறுத்தி வைத்திருந்தனர்.

    புதிய காவல் நிலைய கட்டிடத்தில் 2018-ம் ஆண்டு முதல் காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது.ஆனால் பள்ளி மைதானத்தில் போலீசாரால் கைப்பற்றப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்ட வாகனங்கள் எதையும் அங்கிருந்து எடுத்துச் செல்லப்படாமல் அங்கேயே விட்டு விட்டுச் சென்றுள்ளனர்

    பழைய வாகனங்கள் நிறுத்தப்பட்டு இருக்கும் இடத்தின் அருகில் மாணவர்களுக்கு சிறுநீர் கழிப்பிடம் உள்ளது. பல ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் வாகனங்களில் விஷ பூச்சிகள் ஏதும் இருக்கும் என்ற நிலையில் மாணவர்கள் மிகுந்த பயத்துடன் அந்த வழியாக சென்று 
    சிறுநீர் கழித்துவிட்டு வருகின்றனர்.

    பள்ளி நிர்வாகம் மைதானத்தில் வைத்துள்ள வாகனங்களை அப்புறப்படுத்தும்படி போலீசாரிடம் முறையீடு செய்தும் 
    இதுவரை நிறைவேற்றப்படவில்லை.

    நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களின் அருகில் மாணவர்களை செல்லாமல் தடுப்பதற்கு தினமும் எச்சரிக்கை செய்ய 
    வேண்டிய நிலை உள்ளது.

    மாணவர்களின் பாதுகாப்பை கருதி திருக்காட்டுப்பள்ளி சர்சிவசாமி அய்யர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை போலீசார் அப்புறப்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
    Next Story
    ×