search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திண்டுக்கல் நாகல்நகர் பகுதியில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள மண்பானைகள்
    X
    திண்டுக்கல் நாகல்நகர் பகுதியில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள மண்பானைகள்

    பொங்கல் பானைகள் விற்பனை மும்முரம்

    பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதால் மண்ணால் செய்யப்பட்ட பானைகள் விற்பனை திண்டுக்கல்லில் மும்முரமாக நடைபெற்று வருகிறது
    குள்ளனம்பட்டி:

    தமிழர்களின் முக்கிய பண்டிகைகளில் பொங்க லுக்கு தனி இடம் உண்டு. விவசாயிகள் தங்கள் நிலங்களில் விளையும் நெல்மணிகளைக் கொண்டு சூரிய பகவானுக்கு நன்றி கூறும் விதமாக பொங்கல் பண்டிகை காலம் காலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    முன்னோர்கள் மண்பானைகளில் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். நவீன கால மாற்றத்தால் தற்போது வீடுகளிலேயே பொங்கல் வைத்து கொ
    ண்டாடி வருகின்றனர். இருந்தபோதும் கிராம புறங்களில் சிலர் தற்போதும் பாரம்பரிய முறைப்படி மண்பானைகளில் பொங்கல் வைத்து கால்நடைகளுடன் சிறப்பாக பொங்கல் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். திண்டுக்கல்லை சுற்றி ஏராளமான கிராமங்கள் உள்ளன.

    தற்போது பண்டிகைக்காக வெளி மாவட்டங்களிலிருந்து பொங்கல் பானைகள் விற்பனைக்கு வந்துள்ளது. வண்ணம் தீட்டிய மண்பானைகள் ரூ.200 முதல் ரூ.450 வரையிலும் வழக்கமான மண்பானைகள் ரூ.150 முதல் ரூ.350 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. ஒற்றை மண் அடுப்பு ரூ.300 முதல் ரூ.500 வரை விற்கப்படுகிறது.

    இந்த மண்பானைகளை பொதுமக்கள் ஆர்வமாக வாங்கிச் செல்கின்றனர். குறிப்பாக வண்ணம் தீட்டிய மண்பானைகள் மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

    மண் தட்டுப்பாடு, பொருட்கள் விலை உயர்வு போன்ற காரணத்தால் மண்பானைகள் விலை உயர்ந்துள்ளது. பொதுமக்கள் பாரம்பரிய முறையி லான மண்பானைகளை அதிகம் விரும்புகின்றனர். குறிப்பாக வண்ணம் தீட்டப் பட்டது அதிக அளவில் விற்பனையாகிறது.
    Next Story
    ×