search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கூட்டத்தில் கலெக்டர் பிரபு சங்கர் பேசிய காட்சி.
    X
    கூட்டத்தில் கலெக்டர் பிரபு சங்கர் பேசிய காட்சி.

    வேலைவாய்ப்புகளை உருவாக்க ஆலோசனை கூட்டம்

    கரூர் மாவட்டத்தில் தனியார் வேலை வாய்ப்புகளை உருவாக்குவது தொடர்பான ஆலோசனை கூட்டம் கலெக்டர் தலைமையில் நடைபெற்றது.
    கரூர்:
    கரூர் மாவட்டத்தைச்சேர்ந்த வேலை தேடும் நபர்களுக்கு நபர்களுக்கு இந்திய தொழில் கூட்டமைப்பினர் (சிஐஐ) உதவியுடன் உள்ளுரிலேயே தனியார் வேலை வாய்ப்புகளை உருவாக்குவது  குறித்த ஆலோனைக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது

    கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் பேசியதாவது: 

    கரூர் மாவட்டத்தில் வேலை தேடுவோர்  ஏராளமானோர் உள்ள நிலையில் அவர்களுக்கு கரூர் மாவட்டத்திலேயே வேலைவாய்ப்புகளில் பணி வழங்கிட வேண்டும் என்ற நோக்கத்தில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.

    வேலை வழங்கும் தொழில் நிறுவனங்கள் எதிர்பார்க்கின்ற தகுதிகளுடன் இருப்பவர்களை கண்டறிந்து, பாலிடெக்னிக், ஐ.டி.ஐ. கல்வி, முறையான பயிற்சிகள் வழங்கியும், தொழில்  நிறுவனங்களுக்கு தேவைப்படுகின்ற பல்வேறு நிலையிலான பணிகளுக்கான தகுதியான நபர்களை கண்டறிந்து அவர்களின் தகுதிக்கேற்ற ஊதியத்துடன் தனியார் வேலை வாய்ப்புகளை உருவாக்கி தருவதே இத்திட்டத்தின் நோக்கம்.

    வேலை வாய்ப்பளிக்கக் கூடிய தொழில் நிறுவனங்களுக்கும், வேலை தேடும் நபர்களுக்கும்  இடையில் மாவட்ட நிர்வாகம் ஒரு பாலமாக இருந்து அவர்களை ஒருங்கிணைக்கும் பணிகளை  இத்திட்டத்தின் மூலம் மேற்கொள்வதால் இத்திட்டத்திற்கு பாலம் என பெயரிடப்பட்டுள்ளது.

    கரூர் மாவட்டத்தில் தனியார் வேலைவாய்ப்புக்கென்று சிறப்பு இணையதளம் உருவாக்கப்பட்டு, வேலை தேடுபவர்களையும், வேலை கொடுக்கும் தொழில் நிறுவனங்களையும் அதில் ஒருங்கிணைக்க வேண்டும். தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் நகர வாழ்வாதார மையம் விரைவில் தொடங்கப்பட உள்ளது.

    ஊராட்சி, வட்டாட்சியர், மகளிர் திட்ட அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. 

    தனியார் வேலைவாய்ப்புகள் தேடும் இளைஞர்கள் தங்களது கல்வித்தகுதி, எதிர்பார்க்கும் பணி உள்ளிட்ட விபரங்களை பூர்த்தி செய்து மேற்சொன்ன அலுவலகங்களில் அமைக்கப்படும் வாழ்வாதார மையத்தில் வைக்கப்பட்டுள்ள பெட்டியில் போடவே ண்டும்.

    அந்த மனுக்கள் உரிய அலுவலர்கள் மூலம் பரிசீலிக்கப்பட்டு, தகுந்த தொழில் நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டு அவர்களுக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கித்தர நடவடிக்கை  எடுக்கப்படும்.

    வேலைநாடுநகர்ளுக்கு உள்ளுரிலேயே வேலைவாய்ப்பினை உருவாக்கி, அனைவருக்கும்  பணி நியமன ஆணைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
    Next Story
    ×