search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    பொங்கல் பண்டிகை - கரும்பு விற்பனை தொடக்கம்

    கொரோனா கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதால் வியாபாரம் எந்தளவு இருக்கும் என கணிக்க முடியவில்லை என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
    அவிநாசி:

    பொங்கல் பண்டிகையையொட்டி அவிநாசி - மங்கலம் சாலையில் ஆண்டு தோறும் கரும்பு விற்பனையில் ஈடுபடும் சிலர் இந்தாண்டும் கரும்பு விற்பனையில் ஈடுபட தொடங்கியுள்ளனர்.

    இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில்:

    சேலம் அருகே வைகுந்தம் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் இருந்து கரும்பு வரவழைத்து விற்பனை செய்கிறோம். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த கார்த்திகை மாதமே கரும்பு உற்பத்தி செய்யும் விவசாயிகளிடம் முன்பணம் கொடுத்து வைத்திருந்தோம். தற்போது கரும்பு எடுத்து வர துவங்கியுள்ளோம்.

    ஒரு ஜோடி கரும்பு ரூ. 100 க்கு விற்க துவங்கியுள்ளோம். அப்போது தான் எங்களுக்கு கட்டுப்படியாகும். கடந்த ஆண்டும் இதே விலைக்கு தான் கரும்பு விற்றோம். 

    இம்முறை வியாபாரம் சூடுபிடிக்கவில்லை. வரும் நாட்களில் விற்பனை களைகட்டும் என எதிர்பார்க்கிறோம். கொரோனா கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதால் வியாபாரம் எந்தளவு இருக்கும் என கணிக்க முடியவில்லை. இவ்வாறு அவர் கூறினர்.
    Next Story
    ×