search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அமைச்சர் ஐ.பெரியசாமி
    X
    அமைச்சர் ஐ.பெரியசாமி

    சட்டசபையில் கூட்டுறவு சங்க தேர்தலை ரத்து செய்யும் மசோதா தாக்கல்

    அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் நடத்தப்பட்ட அனைத்து கூட்டுறவு சங்க தேர்தல்களையும் ரத்து செய்ய தற்போதைய தி.மு.க. அரசு முடிவு செய்து, அதற்கான சட்டமுன்வடிவு இன்று சட்டசபையில் தாக்கல் செய்தது.
    சென்னை:

    அ.தி.மு.க. ஆட்சியில் நடைபெற்ற கூட்டுறவு சங்கத்தேர்தலை ரத்து செய்து கூட்டுறவு சங்கங்களை கலைப்பது குறித்த சட்ட மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.

    கடந்த 2018-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் நடைப்பெற்ற கூட்டுறவு சங்க தேர்தலில் பல்வேறு முறைகேடுகள் நடைப்பெற்றதாக புகார்கள் எழுந்தன.

    இது தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், 400 கூட்டுறவு சங்கங்களுக்கு மீண்டும் தேர்தல் நடத்த உத்தரவிட்டது.

    இது தொடர்பாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சட்டசபையில் நடைபெற்ற விவாதத்தின் போது பேசிய கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, கூட்டுறவு சங்கங்களுக்கு பூட்டு போட்டுக் கொண்டு தேர்தல் நடத்தப்பட்டதாகவும், கூட்டுறவு சங்க தேர்தல்கள் எங்கு நடந்தது என்பதே யாருக்கும் தெரியாது எனவும் குற்றம் சாட்டினார்.

    இந்த நிலையில், அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் நடத்தப்பட்ட அனைத்து கூட்டுறவு சங்க தேர்தல்களையும் ரத்து செய்ய தற்போதைய தி.மு.க. அரசு முடிவு செய்து, அதற்கான சட்டமுன்வடிவு இன்று சட்டசபையில் தாக்கல் செய்தது.

    கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி இந்த சட்டமுன்வடிவை தாக்கல் செய்தார். இந்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட உள்ளது.

    இந்த மசோதா நிறைவேறும் நிலையில் கூட்டுறவு சங்கங்களில் சுமார் 20 ஆயிரம் பேரின் பதவிக்காலம் இன்றுடன் முடிவுக்கு வரும் என்பதோடு, தி.மு.க. அரசின் இந்த முடிவுக்கு எதிர்க்கட்சியான அ.தி.மு.க. கடும் எதிர்ப்பு தெரிவிக்கும்.

    Next Story
    ×