search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பேருந்தில் போலீசார் ஆய்வு செய்த காட்சி
    X
    பேருந்தில் போலீசார் ஆய்வு செய்த காட்சி

    பொதுமக்கள் முக கவசம் அணியாவிட்டால் அபராதம்- போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை

    தருமபுரி மாவட்ட போலீஸ் துறை சார்பில் மாவட்டம் முழுவதும் அந்தந்த போலீஸ் நிலையங்கள் மூலம் பொதுமக்களுக்கு ஒலிபெருக்கி வாயிலாக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக கடைப்பிடிக்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.
    தகடூர்:

    கொரோனா 3-வது அலை தொடங்கியுள்ள நிலையில் தமிழகம் முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    இந்த நிலையில் தருமபுரி மாவட்ட போலீஸ் துறை சார்பில் மாவட்டம் முழுவதும் அந்தந்த போலீஸ் நிலையங்கள் மூலம் பொதுமக்களுக்கு ஒலிபெருக்கி வாயிலாக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக கடைப்பிடிக்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

    இந்த நிலையில் தருமபுரி  மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் நேற்று தர்மபுரி 4 ரோடு, புறநகர் பஸ் நிலையம், அரசு கலைக்கல்லூரி ஆகிய இடங்களில் பொதுமக்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக கடைபிடிக்கிறார்களா? என்பதை கண்காணிக்கும் பொருட்டு திடீர் ஆய்வு மேற்கொண்டார். தருமபுரி 4 ரோட்டில் முக கவசம் அணியாமல் வந்த ஆட்டோ டிரைவர்களுக்கு முக கவசம் வழங்கி அறிவுரை வழங்கினார்.

    இதேபோன்று பஸ் நிலையம் மற்றும் பல்வேறு இடங்களில் பஸ்ஸில் சென்ற பயணிகளிடம் முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை முறையாக கடைபிடிக்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார். மேலும் பஸ்ஸின் டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்களை அழைத்து முக கவசம் அணியாமல் வரும் பயணிகள் யாரையும் பஸ்ஸில் ஏற்றக்கூடாது என்று போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை விடுத்தார்.

    இந்த ஆய்வின் போது தருமபுரி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு வினோத், பயிற்சி துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக், நகர போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.
    Next Story
    ×