search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    கொரோனா கட்டுப்பாடுகளுடன் கோவில்களில் வழிபாடு நடத்த அனுமதி அளிக்க வேண்டும் - இந்து முன்னணி வலியுறுத்தல்

    கொரோனா பரவி வருவதை காரணம் காட்டி தமிழக அரசு வெள்ளி, சனி,ஞாயிறு ஆகிய 3 நாட்கள் கோவில்களை திறக்க தடை விதித்துள்ளது.
    திருப்பூர்:

    கொரோனா கட்டுப்பாடுகளுடன் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமை வழிபாடு நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என்று இந்து முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.

    இதுகுறித்து மாநிலத் தலைவரான திருப்பூரை சேர்ந்த காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    கொரோனா பரவி வருவதை காரணம் காட்டி தமிழக அரசு வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்கள் கோவில்களை திறக்க தடை விதித்துள்ளது. மத்திய அரசின் வழிகாட்டுதல் என்று காரணம் சொல்கின்றது.

    ஆனால் மத்திய அரசு கடந்த 27. 12.2021 அன்று சுற்றறிக்கை அனுப்பி கட்டுப்பாடுகளை விதிக்குமாறு அறிவுறுத்தியது. ஆங்கில புத்தாண்டு முடியும்வரை இந்த அரசு காத்திருந்து நேற்று கட்டுப்பாடுகளை விதித்திருக்கின்றது. 

    குறிப்பாக இந்துக்கள் கொண்டாடும் போகிப் பொங்கல், காணும் பொங்கல், மாட்டுப் பொங்கல் நிகழ்ச்சிகள் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வருகின்றது.

    மேலும் தமிழ்க் கடவுள் முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளுக்கு தமிழகம் முழுவதும் பக்தர்கள் பாதயாத்திரையாக தற்போதும், தைப்பூசத்திற்கும் சென்று கொண்டிருக்கின்றார்கள். தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் பல நூறு கிலோ மீட்டர் நடைபயணம் மேற்கொண்டு சாமி தரிசனம் செய்வதற்காக செல்கிறார்கள்.

    திடீரென்று அரசு 3 நாட்கள் கோவில் திறப்புக்கு தடை என்று அறிவித்தவுடன் பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாவார்கள். ஆகவே தமிழக அரசு பழனி பாதயாத்திரை பக்தர்களுக்கு சமூக இடைவெளி ஏற்படுத்தி கட்டுப்பாடு விதித்து வழிபாடு செய்வதற்கு அனுமதிக்க வேண்டும். 

    தமிழர் திருநாளாம் பொங்கல் விழாவினை மக்கள் சிறப்பாகக் கொண்டாட வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கி ஆவண செய்ய வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×