search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    எடப்பாடி பழனிசாமி
    X
    எடப்பாடி பழனிசாமி

    அம்மா மினி கிளினிக் திட்டம்- மா.சுப்பிரமணியன் பேச்சுக்கு எடப்பாடி பழனிசாமி எதிர்ப்பு

    தமிழக சட்டசபையில் அம்மா மினி கிளினிக் தொடர்பாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேசியதற்கு எடப்பாடி பழனிசாமி எதிர்ப்பு தெரிவித்தார்.
    சென்னை:

    சட்டசபையில் இன்று அ.தி.மு.க. உறுப்பினர் வைத்திலிங்கம் பேசும்போது, ‘அம்மா மினி கிளினிக்குகள் மக்களுக்கு பயன்படும் வகையில் செயல்பட்டு வந்தன. அதை திட்டமிட்டு இந்த அரசு மூடியுள்ளது கண்டிக்கத்தக்கது’ என்று தெரிவித்தார்.

    இதற்கு பதில் அளித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசும்போது, ‘அம்மா மினி கிளினிக் கழிவறையிலும், சுடுகாட்டிலும் அமைக்கப்பட்டுள்ளது. சைதாப்பேட்டையில் சுடுகாட்டில் அமைந்துள்ள அம்மா மினி கிளினிக்கை பார்க்க நான் நேரில அழைத்து செல்கிறேன். நீங்களும் வாருங்கள். பத்திரிகையாளர்களையும் அழைத்து செல்வோம்’ என்று கூறினார்.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசும் போது, ‘அம்மா மினி கிளினிக் திட்டத்தை கொச்சைப்படுத்துவது போன்று அமைச்சரின் பேச்சு உள்ளது. இதை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டார்.

    அப்போது முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் குறுக்கிட்டு அமைச்சர் ஆதாரத்துடன் தான் கூறி உள்ளார். அம்மா கிளினிக் இருக்கும் இடத்துக்கு நேரடியாக வருகிறீர்களா? என்றும் கேட்டுள்ளார். உங்கள் கட்சி சார்பில் யாராவது செல்ல தயாராக இருக்கிறீர்களா? என்று கேள்வி எழுப்பினார்.
    Next Story
    ×