search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்
    X
    அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்

    சட்டமன்ற வரலாற்றில் முதல் முறையாக கேள்வி-நேரம் நேரலை

    தமிழக சட்டமன்ற வரலாற்றில் இன்று முதல் முறையாக சபை நிகழ்வுகள் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. அதில் உறுப்பினர்கள் கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.
    சென்னை:

    தமிழக சட்டசபை நேற்று கவர்னர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. இதையடுத்து கூடிய சட்டமன்ற அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில் சட்டசபையை 2 நாட்கள் நடத்துவது என்றும் சபை நிகழ்வுகள் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

    அதன்படி, இன்று சட்டமன்ற வரலாற்றில் முதல் முறையாக சபை நிகழ்வுகள் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. அதில் உறுப்பினர்கள் கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.

    * ஒட்டப்பிடாரத்தில் கலை அறிவியல் கல்லூரி தொடங்கப்படுமா?  என உறுப்பினர் சண்முகையா எழுப்பிய கேள்விக்கு, தூத்துக்குடி மாவட்டத்தில் போதுமான கலை அறிவியல் கல்லூரிகள் உள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பதில் அளித்தார்.

    * சேலம் கோழிக்கால்நத்தம்- வடுகப்பட்டி- வைகுந்தம் சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என உறுப்பினர் ஈஸ்வரன் கேட்டுக்கொண்டதற்கு  சாலையை விரிவுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக  அமைச்சர் எ.வ.வேலு பதில் அளித்தார்.

    * கொடைக்கானலில் கலை அறிவியல் கல்லூரி வேண்டும் என கூறிய ஐ.பி.செந்தில்குமாருக்கு கூட்டுறவுத்துறை சார்பில் கல்லூரி விரைவில் தொடங்கப்பட உள்ளதாக அமைச்சர் பொன்முடி பதில் அளித்தார்.

    * வேளச்சேரி ஒரு வழிப்பாலத்தை இருவழியாக மாற்ற வேண்டும் என்ற உறுப்பினர் ஹசன் மெளலானா கோரிக்கையை, சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்து இருவழியாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.

    * ஓசூரை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்ற தளி உறுப்பினர் ராமச்சந்திரன் கோரிக்கைக்கு, ஓசூரை தனி மாவட்டமாக அறிவிக்க வாய்ப்பில்லை என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் தெரிவித்தார்.

    இவ்வாறு சபையில் விவாதங்கள் நடைபெற்றன.
    Next Story
    ×