search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அமைச்சர் சாமிநாதனை சந்தித்து விசைத்தறியாளர்கள் கோரிக்கை மனு அளித்த போது எடுத்த படம்.
    X
    அமைச்சர் சாமிநாதனை சந்தித்து விசைத்தறியாளர்கள் கோரிக்கை மனு அளித்த போது எடுத்த படம்.

    விசைத்தறியாளர்கள் வேலை நிறுத்தம் - பல்லடத்தில் நாளை ஆலோசனை

    கடந்த 7 வருடங்களாக நீடித்து வந்த விசைத்தறி கூலி உயர்வு பிரச்சினை கடந்த மாதத்தில் அமைச்சர்கள் பேசி உடன்பாடானது.
    பல்லடம்;

    விசைத்தறிகள் வேலை நிறுத்தம் குறித்து பல்லடத்தில் நாளை ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. 

    இதுகுறித்து திருப்பூர், கோவை மாவட்ட விசைத்தறியாளர்கள் சங்க செயலாளர் பாலசுப்பிரமணியன் கூறியதாவது:

    கடந்த 7 வருடங்களாக நீடித்து வந்த விசைத்தறி கூலி உயர்வு பிரச்சினை கடந்த மாதத்தில் அமைச்சர்கள் பேசி உடன்பாடானது. ஆனாலும் ஜவுளி உற்பத்தியாளர்கள் இன்னும் கூலி உயர்வு கொடுக்க மறுக்கின்றனர் .

    எனவே வரும் வருகிற 9-ந்தேதி விசைத்தறிகள் வேலை நிறுத்தப் போராட்டம் செய்வது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்த ஆலோசனைக் கூட்டம் நாளை 6-ந்தேதி பல்லடத்தில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற உள்ளது.

    மேலும் விசைத்தறியாளர்களின் கூலி உயர்வு குறித்து அமைச்சர் சாமிநாதனை நேரில் சந்தித்து மனு வழங்கி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
    Next Story
    ×