என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கோப்பு படம்
  X
  கோப்பு படம்

  கோவை அருகே வீடு புகுந்து பெண்ணை தாக்கி நகை பறிப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தொண்டாமுத்தூரில் நள்ளிரவு வீடு புகுந்த மர்மநபர் பெண்ணை தாக்கி நகை-பணத்தை கொள்ளையடித்து சென்றார்
  கோவை:

  கோவை தொண்டாமுத்தூர் வ.உ.சி நகர் பகுதியில் குடியிருப்பவர் கோவிந்தசாமி (70). இவரது மனைவி விமலகுமாரி (65).  

  இருவரும் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் இன்று அதிகாலை 2  மணிக்கு வீடு புகுந்த மர்ம நபர்கள்  தூங்கிக்கொண்டு இருந்த விமலா குமாரியின் முகத்தை அமுக்கி கழுத்தில் கிடந்த  4 பவுன் தங்க சங்கிலியை  பறித்தார்.  

  விமலாகுமாரி  சத்தம் போட்டு அலறவே  அவரை சரமாரியாக தாக்கினார். பின்னர்  அந்த மர்ம நபர், பக்கத்து அறையில் படுத்திருந்த அவரது தாய் ராமாத்தாள் (85) தலையணைக்கு அடியில் வைத்திருந்த ரூ.7 ஆயிரம் பணத்தை எடுத்துக்கொண்டு பின் பக்கம் வழியாக தப்பி சென்றார். 

  இதுகுறித்து தொண்டாமுத்தூர் போலீஸ் நிலையத்தில் புகர் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். 

  அங்கு கண்காணிப்பு காமிராவில் கொள்ளையன் உருவம் பதிவாகி உள்ளதா? என்பது போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். 
  Next Story
  ×