search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அமைச்சர் செந்தில்பாலாஜி
    X
    அமைச்சர் செந்தில்பாலாஜி

    கோவையில் பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகம் - அமைச்சர் செந்தில்பாலாஜி தொடங்கிவைத்தார்

    கோவையில் தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகத்தை அமைச்சர் செந்தில்பாலாஜி தொடங்கி வைத்தார்
    கோவை:

    பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் அனைத்து அரிசி ரேஷன் அட்டை தாரர்களுக்கும் பச்சரி, வெல்லம், கரும்பு, முந்திரி, திராட்சை உள்பட 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 

    பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டம் இன்று தொடங்கியது. கோவை மாவட்டத்தில் 1.405 ரேஷன் கடைகள் உள்ளன. இவற்றின் மூலம் 10 லட்சத்து 78 ஆயிரத்து 484 பேர் அரிசி குடும்ப அட்டை தாரர்கள் பயன் பெற்று வருகிறார்கள். இவர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது.  

    கோவையில் பொங்கல் பரிசு தொகுப்புகளை  சூலூர் நுகர்வோர் பண்டக சாலையில்  அமைச்சர் செந்தில் பாலாஜி  வழங்கி தொடங்கி வைத்தார். 

    இதனை தொடர்ந்து அவர் சோமனூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், ராமநாதபுரம் நுகர்வோர் கூட்டுறவு பண்டகசாலை ஆகிய பகுதிகளுக்கும்  சென்று குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு களை வழங்கினார்.

    இதில், மாவட்ட கலெக்டர் சமீரன், கூட்டுறவு சங்க இணப்பதிவாளர் பார்த்திபன் , திமுக மாவட்ட பொறுப்பாளர்கள் மருதமலை சேனாதிபதி, நா.கார்த்திக், பையா ஆர்.கிருஷ்ணன், சுற்றுச்சூழல் அணி செயலாளர் கார்த்திகேய சிவசேனாதிபதி, முன்னாள் எம்பி நாகராஜ் உள் ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

    கூட்ட நெரிசலை தடுக்கும் வகையில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு வீடு, வீடாக டோக்கன் வினியோகம் செய்யப்பட்டுள்ளது. ஒருநாளைக்கு 200 பேர் வீதம் பரிசு தொகுப்பு பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

    வருகிற 10-ந்தேதிக்குள் அனைவருக்கும் பொங்கல் பொருட்கள் கொடுக்க முடிவு செய்யப்பட்டு பணிகள் துரிதப்படுத்தப்பட்டு உள்ளது. 

    10-ந்தேதிக்குள் பொருட்கள் வாங்க முடியாதவர்கள் பொங்கல் பண்டிகை முடிந்ததும் வாங்கிக் கொள்ளலாம்.
    Next Story
    ×