search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அன்புமணி ராமதாஸ்
    X
    அன்புமணி ராமதாஸ்

    ஜப்தி நடவடிக்கையால் உழவர் மரணம்: குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும்- அன்புமணி

    தனியார் நிதி நிறுவனத்தின் ஜப்தி நடவடிக்கையால் அதிர்ச்சியில் உயிரிழந்த உழவர் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என பா.ம.க. இளைஞரணித்தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
    சென்னை:

    பா.ம.க இளைஞரணித்தலைவர் அன்புமணி ராமதாஸ் டுவிட்டரில் கூறியுள்ளதாவது:-

    டிராக்டர் கடனுக்கு பிணை அளித்ததற்காக 6 ஏக்கர் நிலத்தை  ஸ்ரீராம் நிதி நிறுவனம் ஜப்தி செய்ய முயன்றதால் அதிர்ச்சியடைந்த  செய்யூர் தொகுதி புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த  நீலமேகம் என்ற விவசாயி மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவரது குடும்பத்திற்கு அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

    கடன் பெற்றவர் வறுமை காரணமாக தவணை செலுத்த முடியாத நிலையில், போதிய அவகாசம் தராமல் பிணை அளித்தவரின் வாழ்வாதாரத்தை நிதி நிறுவனம் பிடுங்க நினைத்தது தான் நீலமேகத்தின்  உயிரிழப்புக்கு காரணம்; இதற்கு அந்த நிறுவனம் தான் பொறுப்பேற்க வேண்டும்!

    நீலமேகத்தின் இறப்புக்கு நீதி கேட்டு உழவர்கள் அச்சரப்பாக்கத்தில் போராட்டம் நடத்துகின்றனர். சம்பந்தப்பட்ட நிறுவனம் மீது நடவடிக்கை எடுப்பதுடன், ஜப்தி நடவடிக்கையையும் நிறுத்திவைக்க வேண்டும். இறந்த நீலமேகம் குடும்பத்திற்கு அரசு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.

    இவ்வாறு அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
    Next Story
    ×