என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  வீடுகளில் உள்ள தண்ணீர் தொட்டியை பணியாளர்கள் ஆய்வு செய்த காட்சி.
  X
  வீடுகளில் உள்ள தண்ணீர் தொட்டியை பணியாளர்கள் ஆய்வு செய்த காட்சி.

  திருப்பூரில் டெங்கு தடுப்பு பணிகள் தீவிரம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  காய்ச்சல் பாதிப்பு அதிகரிக்கும் குடியிருப்பு பகுதிகளில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது.
  திருப்பூர்:

  திருப்பூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக சிறுவர்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சிறுவர்கள் சிலர் பலியாகி  உள்ளனர். இதையடுத்து மாவட்டம் முழுவதும் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. 

  குறிப்பாக உடுமலை, குடிமங்கலம் மற்றும் மடத்துக்குளம் ஒன்றியத்தில் சீதோஷ்ண நிலை மாற்றம் காரணமாக குழந்தைகள், பெரியவர்கள் என  பலரும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

  காய்ச்சல் பாதிப்பு அதிகரிக்கும் குடியிருப்பு பகுதிகளில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது. மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் டெங்கு குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. 

  இதேபோல் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில், அரசு மருத்துவமனையில், பிரத்யேக காய்ச்சல் வார்டு தயார் நிலையிலும் உள்ளன. அதேநேரம் காய்ச்சலால் சிகிச்சைக்கு அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்தால், டாக்டர்கள்  விடுப்பு எடுப்பதை தவிர்க்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
  Next Story
  ×