search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    மோட்டார் சைக்கிளில் 2 பேர் மட்டுமே பயணிக்க வேண்டும் - போலீசார் அறிவுறுத்தல்

    சாலை பாதுகாப்பு விதிகளை பின்பற்றாவிடில் ஏற்படும் விபரீதம் குறித்து மாணவர்கள் தத்ரூபமாக நடித்து காட்டினர்.
    அவிநாசி:

    திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி என்.எஸ்.எஸ்., அலகு-2 சார்பில் அவிநாசி கருமாபாளையம் கிராமத்தில் 7 நாள் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக பாதுகாப்பு விழிப்புணர்வு மற்றும் ரத்த தான முகாம் நடந்தது.

    அலகு - 2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் வரவேற்றார். கருமாபாளையம் கிராமத்தின் பிரதான சாலையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நடைபெற்றது.

    இதில் அவிநாசி போக்குவரத்து பிரிவு இன்ஸ்பெக்டர் சக்திவேல் பேசுகையில்:

    சாலை பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக்கூடாது. மோட்டார் சைக்கிளில் செல்லும் போது ஹெல்மெட் அணிய வேண்டும்.

    காரில் செல்லும் போது “சீட் பெல்ட்’ அணிவது அவசியம். மோட்டார் சைக்கிளில் 2 பேர் மட்டுமே பயணிக்க வேண்டும். அதிவேகத்தில் செல்லக்கூடாது. பஸ்சின் படியில் பயணம் செல்வதை தவிர்க்க வேண்டும் என்றார்.

    சாலை பாதுகாப்பு விதிகளை பின்பற்றாவிடில் ஏற்படும் விபரீதம் குறித்து மாணவர்கள் தத்ரூபமாக நடித்து காட்டினர். பின் கருமாபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ரத்த வங்கியுடன் இணைத்து ரத்ததான முகாம் நடத்தினர். 

    மாணவர்கள், ஊர்மக்கள் ஆர்வமுடன் ரத்த தானம் செய்தனர். ரத்த வங்கி மருத்துவர் வசந்தகுமார் ரத்ததானம் செய்வதால் ஏற்படும் நன்மை குறித்து விளக்கினார். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் செய்திருந்தார்.
    Next Story
    ×