search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    டிடிவி தினகரன்
    X
    டிடிவி தினகரன்

    வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாள்- டி.டி.வி.தினகரன் வாழ்த்து

    வீரபாண்டிய கட்டபொம்மனின் பிறந்தநாளையொட்டி அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார்.
    சென்னை:

    அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:-

    நம்மை அடிமைப்படுத்தி ஆண்ட ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு எதிராக வீர முழக்கமிட்ட மன்னர் வீர பாண்டிய கட்டபொம்மனின் பிறந்த நாள் இன்று.

    தாய்நாட்டின் உரிமைகளைக் காப்பதும் சொந்த மக்கள் சுதந்திரக் காற்றை சுவாசிப்பதுமே எல்லாவற்றையும் விட முக்கியம் என தன் இன்னுயிரையும் ஈந்த அப்பெருமகனின் தியாகத்தையும், உறுதியையும் போற்றி வணங்கிடுவோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    Next Story
    ×