search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    திருவள்ளுவர் தின பேச்சு - கட்டுரை போட்டி: பள்ளி, கல்லூரி மாணவர்கள் படைப்புகளை அனுப்பலாம்

    கட்டுரை போட்டி5 முதல் 8-ம் வகுப்பு வரை திருக்குறள் கூறும் அன்பு நிலை என்ற தலைப்பில் நடைபெற உள்ளது.
    உடுமலை:

    உடுமலை உழவர் சந்தை எதிரேயுள்ள முழுநேர கிளை நூலகம் எண் இரண்டு நூலக வாசகர் வட்டம் ,உடுமலை பாவரலேறு தேன்தமிழ் பாசறை, திருப்பூர்மாவட்டஉலகத் திருக்குறள் கூட்டமைப்பு சார்பில் தை 1 அன்று திருவள்ளுவர் திருநாள், திருவள்ளுவர் ஆண்டு தொடக்க விழா ஆகிய விழாக்களை நடத்த உள்ளது. 

    இதையொட்டிபள்ளி கல்லூரி மாணவ மாணவிகளுக்கு திருக்குறள் போட்டிகள் ,கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டி, கவிதைப்போட்டி, ஓவியப்போட்டி, விளையாட்டுப்போட்டிகள் நடைபெற உள்ளன.

    கட்டுரைப் போட்டி 5 முதல் 8-ம் வகுப்பு வரை திருக்குறள் கூறும் அன்பு நிலை, 9-10ம் வகுப்புகளுக்கு திருக்குறள் கூறும் அறிவு நிலை,11-12ம் வகுப்புகளுக்கு திருக்குறள் கூறும் நட்பு, நலம், கல்லூரி மாணவ மாணவிகளுக்கு திருக்குறள் கூறும் சமநிலை பண்பு ஆகிய தலைப்புகளில் நடக்கிறது.

    பேச்சுப்போட்டி 5 முதல் 8-ம்வகுப்பு வரை குறள் காட்டும் மழையின் சிறப்பு,9 -10ம் வகுப்புகளுக்கு குறள் காட்டும் ஒழுக்க நெறி,11 -12-ம் வகுப்புகளுக்கு குறள் காட்டும் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் ஆகிய தலைப்புகளில் நடக்கிறது.

    கவிதை போட்டி5 முதல் 9-ம் வகுப்பு வரை திருக்குறளில் கல்வி, 9 -10ம் வகுப்புகளுக்கு திருக்குறளில் ஈகை,11 - 12ம் வகுப்புகளுக்கு திருக்குறளில் அறம், கல்லூரி மாணவ மாணவிகளுக்கு வள்ளுவமே வாழ்வியல் நெறி என்ற தலைப்புகளில் நடக்கிறது.

    ஓவியப்போட்டியானது அனைவருக்கும் பொதுவான1330 குறட்பாக்களில் ஒன்றை கருப்பொருளாகக் கொண்டு ஓவியம் வரைய வேண்டும். அந்தக் குறளையும் ஓவியத்துடன் குறிப்பிட வேண்டும்.

    போட்டியில் பங்கு பெறும் மாணவ மாணவிகள் அனைவருக்கும் திருக்குறள் முப்பெரும் விழா நாளன்று சான்றிதழ்கள், பரிசுகள் வழங்கப்படும். தங்கள் படைப்புகளை உடுமலை உழவர் சந்தை எதிரே உள்ள கிளை நூலகம் எனஇரண்டில் வருகிற 10-ந்தேதி அன்று மாலை வரை வழங்கலாம்.

    திருவள்ளுவர் தினத்தன்று நூலக வளாகத்தில் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்தல், பகத்சிங் சிலம்பம் களரி வரலாற்று அறக்கட்டளை சார்பில் பொங்கல் விழா நடைபெறும்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நூலக வாசகர் வட்டம் நூலகர்கள் மற்றும் பாவலரலேறு தேன் தமிழ் பாசறை திருக்குறள் கூட்டமைப்பினர் செய்து வருகின்றனர். மேலும் விபரங்களுக்கு 9488879843 என்ற எண்ணில்  தொடர்புகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
    Next Story
    ×