search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குட்கா பறிமுதல்
    X
    குட்கா பறிமுதல்

    மார்த்தாண்டத்தில் 150 கிலோ குட்கா பறிமுதல்- 2 பேர் சிக்கினர்

    மார்த்தாண்டத்தில் காரில் கொண்டு வந்த 150 கிலோ குட்காவை பறிமுதல் செய்த போலீசார் 2 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கஞ்சா, குட்கா, புகையிலை, திருட்டு, மது விற்பனையை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

    மாவட்டம் முழுவதும் போலீசார் சோதனையை தீவிரப்படுத்தி கண்காணித்து வருகின்றனர். தொடர்ந்து குற்ற செயலில் ஈடுபடுபவர்களை குண்டர் சட்டத்திலும் போலீசார் கைது செய்து வருகிறார்கள். பூதப்பாண்டி அருகே ஞாலம் காலனியைச் சேர்ந்த சுரேஷ் ராஜன். இவர் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்தார்.

    இவர் தொடர்ந்து குற்றசெயலில் ஈடுபட்டதால் அவரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ளனர். இதேபோல் கன்னியாகுமரி சுனாமி காலனி பகுதியை சேர்ந்தவர் மைக்கேல் என்பவரையும் போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    இதையடுத்து குமரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 51 ஆக உயர்ந்துள்ளது.

    கஞ்சா குட்கா புழக்கத்தை தடுக்கும் வகையில் போலீசார் நேற்றிரவு அதிரடி கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர். மார்த்தாண்டம் பகுதியில் காரில் குட்கா, புகையிலை கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் போலீசார் அந்த பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர் .அப்போது அந்த வழியாக வந்த காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது அதில் குட்கா புகையிலை பாக்கெட்டுகள் இருந்தது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் காரில் இருந்த 150 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர். காரில் இருந்த இரண்டு பேரையும் போலீசார் பிடித்தனர். பிடிபட்ட இருவரையும் பறிமுதல் செய்யப்பட்ட குட்கா புகையிலையும் காரையும் மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    Next Story
    ×