என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  மல்லிகை பூ
  X
  மல்லிகை பூ

  நெல்லையில் மல்லிகை பூ கிலோ ரூ.2 ஆயிரமாக உயர்வு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு பூக்கள் விலை இன்று கடுமையாக உயர்ந்தது. சந்திப்பு பூ மார்க்கெட்டில் மல்லிகை பூ ஒரு கிலோ ரூ. 2 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்பட்டது.
  நெல்லை:

  நெல்லை சந்திப்பு பூ மார்க்கெட்டில் இருந்து தினமும் ஏராளமானோர் பூக்களை வாங்கி செல்வர்.

  பண்டிகை நாட்களில் இங்கு கூட்டம் அலைமோதும். இங்கிருந்து நெல்லை, தென்காசி மாவட்ட வியாபாரிகள் பூக்களை வாங்கிக் கொண்டு செல்வது வழக்கம். ஒவ்வொரு மாதமும் வளர்பிறை சுபமுகூர்த்த தினங்கள், பண்டிகைகள் உள்ளிட்ட காலக்கட்டங்களில் பூக்களுக்கு கிராக்கி அதிகரிப்பது வழக்கம்.

  இந்நிலையில் நாளை புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி இன்று பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

  ஏற்கனவே பனிப்பொழிவு காரணமாக பூக்கள் விளைச்சல் பாதிக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து முகூர்த்த நாட்கள் வந்ததால், பூக்கள் விலை அதிகரித்து விற்கப்பட்டது. கடந்த சில நாட்களாக பூக்கள் விலை சற்று இறங்கு முகத்தில் இருந்தது.

  இந்நிலையில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு பூக்கள் விலை இன்று கடுமையாக உயர்ந்தது. சந்திப்பு பூ மார்க்கெட்டில் மல்லிகை பூ ஒரு கிலோ ரூ. 2 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்பட்டது.

  அதே போன்று ஒரு கிலோ பிச்சிப்பூ ரூ.1800 வரையும் விற்பனை செய்யப்பட்டது. செவ்வந்திபூ, ரோஜா தலா ரூ. 150-க்கும், கேந்திபூ ரூ. 50-க்கும் விற்கப்பட்டது. விலை உயர்ந்து காணப்பட்டாலும் பொதுமக்கள் போட்டி போட்டு கொண்டு பூக்களை வாங்கி சென்றனர்.
  Next Story
  ×