search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    நீட் பயிற்சி மையத்தில் படிக்கும் 34 மாணவ-மாணவிகளுக்கு கொரோனா

    தொற்றால் பாதிக்கப்பட்ட 34 பேரும் ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள கொரோனா பராமரிப்பு மையத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
    சென்னை:

    சென்னையில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. பல தெருக்களில் கொத்து கொத்தாக பரவி வருகிறது.

    அந்த தெருக்களை கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவித்து மேலும் பரவாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் ஒரே இடத்தில் 34 பேருக்கு தொற்று ஏற்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    சைதாப்பேட்டையில் உள்ள மாதிரி பள்ளி அருகில் மாணவ-மாணவிகள் நீட் மற்றும் உயர் கல்வித்துறை பயிற்சி மையம் உள்ளது. இந்த மையத்தில் மாணவ- மாணவிகள் தங்கி படித்து வருகிறார்கள்.

    அவர்களில் ஒரு மாணவனுக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து அனைவரும் பரிசோதிக்கப்பட்டனர். அதில் 34 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

    ஒரு மாணவர் ஊருக்கு சென்று திரும்பி இருக்கிறார். அவருக்கு தொற்று ஏற்பட்டு மற்றவர்களுக்கும் பரவி இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

    தொற்றால் பாதித்த 34 பேரும் ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள கொரோனா பராமரிப்பு மையத்தில் சேர்க்கப்பட்டனர். 100 படுக்கைகளுடன் இருக்கும் அந்த மைதானத்தில் தற்போது 34 மாணவ-மாணவிகள் மட்டுமே உள்ளனர்.

    மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கொரோனா மையத்துக்கு சென்று அனைத்து மாணவ-மாணவிகளையும் பார்த்தார். அப்போது அவர்களிடம் தைரியமாக இருக்கும்படியும், மற்றவர்களுக்கு பரவக் கூடாது என்பதற்காகவே தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக கூறினார்.

    பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறும்போது, அனைத்து மாணவ-மாணவிகளும் நல்ல உடல்நலத்தோடு இருக்கிறார்கள். முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள அவர்களுக்கு உணவு மற்றும் மன அழுத்தம் ஏற்படாமல் இருப்பதற்காக பொழுது போக்குக்கான வசதிகளும் உடனடியாக செய்து கொடுக்கப்படும் என்றார்.

    Next Story
    ×