search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வெள்ளக்காடான சாலையில் சீறிப்பாய்ந்து செல்லும் வாகனம்
    X
    வெள்ளக்காடான சாலையில் சீறிப்பாய்ந்து செல்லும் வாகனம்

    சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

    சென்னையில் இன்று மாலை முதல் கனமழை பெய்து வரும் நிலையில், பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
    சென்னை:

    வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று கடலோர மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் இன்று மாலை முதல் கனமழை பெய்துவருகிறது. இதனால் சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளித்தன. பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சுரங்கப்பாதைகளில் தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தாழ்வான பகுதிகளில் உள்ள பல்வேறு கடைகளுக்குள் தண்ணீர் புகுந்தது. 

    சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு கன முதல் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இன்று இரவும் இந்த மாவட்டங்களில் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

    தற்போது வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் நகர்வு காரணமாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு  உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    இன்று அதிகபட்சமாக எம்ஆர்சி நகரில் 20 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. நுங்கம்பாக்கத்தில் 18 செ.மீ., மீனம்பாக்கத்தில் 12 செ.மீ. மழை பெய்துள்ளது.
    Next Story
    ×