என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கைது
  X
  கைது

  தஞ்சை அருகே 7 வயது சிறுமியிடம் தவறாக நடக்க முயற்சி- போக்சோ சட்டத்தில் சேலை வியாபாரி கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தஞ்சை அருகே 7 வயது சிறுமியிடம் தவறாக நடக்க முயன்றது தொடர்பாக சேலை வியாபாரியை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

  வல்லம்:

  தஞ்சை வடக்கு வாசல் ராஜா கோரி பகுதியை சேர்ந்தவர் ராஜா (வயது 63) சேலை வியாபாரி. இவர் தஞ்சை அருகே உள்ள ஒரு கிராமத்திற்கு சேலைகள் விற்பனை செய்வதற்காக சென்றுள்ளார். அப்போது அப்பகுதியை சேர்ந்த ஒரு வீட்டில் சேலை விற்பனை செய்யும் பொழுது தனியாக இருந்த 7 வயது சிறுமியிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சி செய்தார். 

  இதுகுறித்து அந்த சிறுமி தனது பெற்றோரிடம் தகவல் தெரிவித்தார். அப்போது அந்த பகுதியை சேர்ந்தவர்கள் ராஜாவை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து சேலை வியாபாரி ராஜா தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

  இதையடுத்து வல்லம் அனைத்து மகளிர் போலீசில் சிறுமியின் தாயார் புகார் செய்தார். இதன் பேரில் இன்ஸ்பெக்டர் கலைவாணி வழக்கு பதிவு செய்து போக்சோ சட்டத்தின் கீழ் ராஜாவை கைது செய்தார்.

  Next Story
  ×