search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    டாஸ்மாக்
    X
    டாஸ்மாக்

    டாஸ்மாக் கடைகளில் புத்தாண்டில் அதிக மது விற்பனை செய்ய மதுபானங்கள் குவிப்பு

    தமிழகம் முழுவதும் மது அருந்தி வாகனங்களை ஓட்டி சென்றால் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.
    சென்னை:

    தமிழகத்தில் தீபாவளி, பொங்கல், புத்தாண்டு போன்ற பண்டிகை காலங்களில் மதுவிற்பனை அமோகமாக நடைபெறும்.

    இந்த கால கட்டங்களில் அதிகமாக மதுபானங்களை விற்பனை செய்ய டாஸ்மாக் நிறுவனம் பல்வேறு முன்னேற்பாடுகளை செய்வது வழக்கம்.

    இந்தநிலையில் புத்தாண்டு பண்டிகை கொண்டாட்டத்திற்கு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. கொரோனா தொற்று அதிகரித்துள்ளதால் கடற்கரையில் புத்தாண்டை கொண்டாட தடை விதித்துள்ளது.

    மது அருந்தி வாகனங்களை ஓட்டி சென்றால் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் டாஸ்மாக் மதுக்கடைகளில் நாளை புத்தாண்டு கொண் டாட்டத்தையொட்டி மதுபா னங்கள் குவிக்கப்பட் டுள்ளன.

    தமிழகம் முழுவதும் உள்ள 5,300 டாஸ்மாக் கடைகளில் தேவையான அளவு அனைத்து மது வகைகளும் நிரப்பி வைக்கப்பட்டுள்ளன. குறைந்த விலை மற்றும் அதிக விலையில் உள்ள பிராந்தி, விஸ்கி, ரம் மற்றும் பீர் மது வகைகள் மது பிரியர்களுக்கு இல்லை என்று சொல்லாத அளவுக்கு போதுமான அளவு அனைத்து பிராண்டுகளும் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

    இன்று முதல் அனைத்து கடைகளிலும் அந்தந்த மாவட்ட டாஸ்மாக் மேலா ளர்கள் தேவையான அளவு மதுபானங்களை கேட்டறிந்து குடோன்களில் இருந்து அனுப்பி வைக்கிறார்கள்.

    கடந்த ஆண்டு மது பார்கள் மூடப்பட்டு இருந்த நிலையில் இந்த ஆண்டு பார்கள் திறக்கப்பட்டதோடு மது விற்பனை நேரமும் பழைய நேரத்திற்கு மாற்றப்பட்டது. இதனால் மதுபானங்கள் அதிகளவு விற்பனையாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    டாஸ்மாக்

    நாளை மாலையில் இருந்து டாஸ்மாக் கடைகளில் கூட் டம் அலைமோதக் கூடும். பார்கள் நிரம்பி வழியும் என்று கடை ஊழியர்கள், அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளனர். அந்தந்த மாவட்ட டாஸ்மாக் மேலா ளர்கள், கடை சூப்பர் வைசர் கள் மூலம் விற்பனையை அதிகரிக்க தேவையான வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    சென்னையில் 3 மாவட்டங்களிலும் 300-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகளில் தேவையான அளவு மதுபானங்கள் இன்று முதல் இருப்பு வைக்கப்படுகின்றன.

    மொத்தமாக கேட்டாலும் கொடுப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இரவு 10 மணிவரை மட்டுமே டாஸ்மாக் கடை கள் செயல்படுவதால் அதற் குள்ளாக அதிகபட்சமாக எவ்வளவு விற்பனை செய்ய முடியுமோ அதற்கு ஏற்ற வகையில் மதுபானங்களை இருப்பு வைத்துக் கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் ஒவ்வொரு கடைகளிலும் மதுபானங்கள் குவிக்கப்பட்டுள்ளன.

    புத்தாண்டு மது விற்பனைக்கு இலக்கு நிர்ணயிக்கப்படவில்லை என்றாலும், அதிகளவு விற்பனை செய்ய வேண்டும் என்று அனைத்து ஊழியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் புத்தாண்டு மதுவிற்பனை நாளை முதல் சூடுபிடிக்கத் தொடங்கும்.

    தமிழகம் முழுவதும் சுமார் ரூ.250 கோடிக்கு மேல் மதுவிற்பனையாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×