
இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர்.
இந்த கோவிலுக்கு செல்ல அமாவாசை, பவுர்ணமி, பிரதோஷம் ஆகிய நாட்களையொட்டி மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. இந்தநிலையில் மார்கழி மாத பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு வருகிற 31-ந் தேதி முதல் 3-ந் தேதி வரை பக்தர்கள் கோவிலுக்கு செல்ல மாவட்ட நிர்வாகம், வனத்துறை மற்றும் கோவில் நிர்வாகத்தின் சார்பாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
காலை 7 மணி முதல் 10 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலையேற அனுமதி அளிக்கப்படும் என்றும், அனுமதி நாட்களில் மழை பெய்தால் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல பக்தர்கள் நீர் ஓடை பகுதிகளில் இறங்கி குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டு இருப்பதாகவும், இரவு நேரங்களில் மலைப்பகுதியில் பக்தர்கள் தங்குவதற்கு அனுமதி இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.