என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    கைது
    X
    கைது

    இந்த ஆண்டு 106 பேர் குண்டர் சட்டத்தில் கைது- போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் தகவல்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை 106 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் தெரிவித்துள்ளார்.
    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு 41 கொலைகளும், இந்த ஆண்டு இதுவரை 51 கொலைகளும் நடந்துள்ளன. கடந்த ஆண்டு 2 ஆதாய கொலைகளும், இந்த ஆண்டு 5 ஆதாய கொலைகளும், கடந்த ஆண்டு 5 கூட்டு கொள்ளையும், இந்த ஆண்டு 9 கூட்டு கொள்ளையும், கடந்த ஆண்டு 41 வழிப்பறியும், இந்த ஆண்டு 53 வழிப்பறியும், கடந்த ஆண்டு 7 கொள்ளையும்.

    இந்த ஆண்டு 2 கொள்ளை சம்பவங்களும், சாதாரண ஒரு திருட்டு சம்பவமும் என மொத்தம் கடந்த ஆண்டு 56 குற்ற சம்பவங்களும், இந்த ஆண்டு 70 குற்ற சம்பவங்களும் நடந்துள்ளன. இதில் கடந்த ஆண்டு 88 சதவீத குற்றங்களும், இந்த ஆண்டு 90 சதவீத குற்றங்களும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. இதன்மூலம் கடந்த ஆண்டு 59 சதவீத பொருட்களும், இந்த ஆண்டு 48 சதவீத பொருட்களும் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளன.

    கடந்த ஆண்டு ரூ.46 லட்சத்து 26 ஆயிரத்து 344 மதிப்பிலான பொருட்கள் திருடுபோனதில் ரூ.27 லட்சத்து 11 ஆயிரத்து 935 மதிப்பிலான பொருட்கள் மீட்கப்பட்டன. இந்த ஆண்டு ரூ.27 லட்சத்து 35 ஆயிரத்து 10 மதிப்பிலான பொருட்கள் திருடு போனதில் ரூ.13 லட்சத்து 9 ஆயிரத்து 185 மதிப்பிலான பொருட்கள் மீட்கப்பட்டு உள்ளன. பாலியல் கொடுமைகளை தடுக்கும் வகையில் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இதன்படி மாவட்டத்தில் கடந்த ஆண்டு 93 வழக்குகளும், இந்த ஆண்டு இதுவரை 104 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

    நராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு 292 விபத்துகளில் 305 பேர் பலியாகி உள்ளனர். இந்த ஆண்டு இதுவரை 299 விபத்துகளில் 307 பேர் பலியாகி உள்ளனர். கடந்த ஆண்டு 730 விபத்துகளில் 776 பேர் காயமடைந்து உள்ளனர். இந்த ஆண்டு இதுவரை 793 விபத்துகளில் ஆயிரத்து 43 பேர் காயமடைந்து உள்ளனர். கடந்த ஆண்டு போக்குவரத்து விதிகளை மீறியதாக 7 லட்சத்து 95 ஆயிரத்து 753 வழக்குகளும், இந்த ஆண்டு இதுவரை 9 லட்சத்து 26 ஆயிரத்து 916 வழக்குகளும் பதிவுசெய்யப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    தொடர் குற்ற செயல்களில் ஈடுபட்டு பொது அமைதிக்கு கேடு விளைவித்து சட்டம் ஒழுங்கு பிரச்சினையில் ஈடுபட்டு வந்ததாக கடந்த 2019 மற்றும் 2020-ம் ஆண்டுகளில் தலா 19 பேரும், இந்த ஆண்டு இதுவரை 106 பேரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். கடந்த ஆண்டுகளைவிட 5 மடங்கு குற்றவாளிகள் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டு பொது அமைதிக்கு வழிவகை செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×