என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  பறவைகள் கணக்கெடுப்பில் ஈடுபட்ட மாணவர்கள்.
  X
  பறவைகள் கணக்கெடுப்பில் ஈடுபட்ட மாணவர்கள்.

  திருப்பூரில் பறவைகள் கணக்கெடுப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  5 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள ஊர்ப்புற பறவைகளை கணக்கீடு செய்தனர்.
  திருப்பூர்:

  திருப்பூர் சிக்கண்ணா அரசு கல்லூரி நாட்டுநலப்பணி திட்டம் அலகு-2 சார்பில் கருமாபாளையம் கிராமத்தில் சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில்  கிராமத்தில் உள்ள உள்ளூர் பறவைகளை பற்றி அறிந்து கொள்வதற்காக பறவைகள் நோக்கல் நிகழ்ச்சி நடைபெற்றது.   

  இதில் திருப்பூர் இயற்கை கழக தலைவர் ரவீந்திரன் சிறப்பு விருந்தினராக  கலந்து கொண்டு  வலசை வரும் பறவைகளை எவ்வாறு கண்டுபிடிப்பது, அதன் குணங்கள் என்ன? எந்தெந்த பறவைகள் எந்தெந்த நாட்டில் இருந்து வருகிறது.எதற்காக வலசை வருகிறது என்பதை பற்றியும், பறவைகளால் மனிதர்களுக்கு என்னென்ன நன்மைகள் ஏற்படுகிறது என்று விளக்கினார். 

  பின்னர் 5 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள ஊர்ப்புற பறவைகளை கணக்கீடு செய்தனர். இதில்  சிட்டுக்குருவி, புதர் குருவி, சின்னா, தவுட்டுக்குருவி, மைனா, தேன்சிட்டு, கொண்டலாச்சி, ராபின், புள்ளிபுறா, பிராமினி,கருங்கொண்டை நாகவாய், டே பேக்சைடு, சைட்டு உள்ளிட்ட 32 வகை பறவைகள் கண்டறியப்பட்டது.

  Next Story
  ×