என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கோப்புபடம்
  X
  கோப்புபடம்

  சுங்கச்சாவடியை அகற்றாவிட்டால் ஆர்ப்பாட்டம்- காமராஜர் மக்கள் பாதுகாப்பு பேரமைப்பு அறிவிப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  60 கிலோமீட்டர் தூரத்திற்கு தனியார் நெடுஞ்சாலை அமைத்து அந்த சாலைக்காக சுங்கம் வசூலிக்கலாம் என்பது விதிமுறை.
  திருப்பூர்:

  நீர்நிலையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடியை அகற்றாவிட்டால் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என காமராஜர் மக்கள் பாதுகாப்பு பேரமைப்பு அறிவித்துள்ளது. இதுகுறித்து மாநிலத்தலைவர் எஸ் .வி. பூமிநாதன் திருப்பூர் மாவட்ட கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

  திருப்பூர் மாவட்டம் அவிநாசி பாளையம் அருகில் தாராபுரம் சாலையில் உள்ள வேலம்பட்டி என்ற கிராமத்தில் பழமை வாய்ந்த குளத்தை மூடி அதன்மீது பலதரப்பட்டவர்களின் எதிர்ப்பையும் மீறி சுங்கச்சாவடி அமைத்து தற்போது பயன்பாட்டுக்கு வர உள்ளது.

  60 கிலோமீட்டர் தூரத்திற்கு தனியார் நெடுஞ்சாலை அமைத்து அந்த சாலைக்காக சுங்கம் வசூலிக்கலாம் என்பது விதிமுறை.ஆனால் இந்த சுங்கச்சாவடியானது விதிமுறையை மீறி அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 40 கிலோ மீட்டர் தூரம் மட்டுமே உள்ளது.

  அவிநாசி-அவிநாசிபாளையம் சாலை ,அதிலும் குறிப்பாக கோவில்வழியில் இருந்து அவிநாசிபாளையம் வரை உள்ள தூரம் 15 கிலோமீட்டர் ஆகும். இந்த 15 கிலோமீட்டர் சாலையை மட்டுமே தனியார் துறை அமைத்துள்ளது. எஞ்சியுள்ள 25 கிலோ மீட்டர் சாலை அரசுக்கு சொந்தமானதாகும்.

  உண்மை இப்படி இருக்க இந்த சுங்கச்சாவடிக்கு யார் அனுமதி கொடுத்தது என்பது அப்பகுதி மக்களின் கேள்வியாகும். ஆகவே சட்டவிரோதமாக அமைத்துள்ள இந்த சுங்கச்சாவடியை முற்றிலும் அகற்ற உத்தரவிட வேண்டும் என  மாவட்ட கலெக்டரை கேட்டுக்கொள்கிறோம்.

  அப்படியும் இந்த சுங்கச் சாவடி அகற்றப்படவில்லை என்றால் காமராஜர் மக்கள் பாதுகாப்பு பேரமைப்பின் சார்பில் மிகப் பெரிய ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  Next Story
  ×