என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கோப்பு புகைப்படம்
  X
  கோப்பு புகைப்படம்

  தமிழகத்தில் மேலும் 11 பேருக்கு ஒமைக்ரான் தொற்று

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஒமைக்ரான் உறுதியானவர்களில் 6 பேர் சென்னை கிங்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுள்ளனர்.
  சென்னை

  இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது.  இன்று காலை  நிலவரப்படி ஒமைக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 653 ஆக இருந்தது. தமிழகத்தை பொருத்தவரை 34 பேர் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மேலும் 11 பேருக்கு ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவித்துள்ளது.

  இதுகுறித்து தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

  தமிழகத்தில் வெளிநாடுகளில் இருந்து வந்த 7 பேருக்கும், அவர்களுடன் தொடர்பில் இருந்த 4 பேருக்கும் என மொத்தம் 11 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதியாகியுள்ளது. ஒமைக்ரான் உறுதியானவர்களில் 6 பேர் சென்னை கிங்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் ஒமைக்ரான் வைரஸின் மொத்த பாதிப்பு 45ஆக உயர்ந்துள்ளது.

  இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  மேலும் தமிழகத்தில் ஒமைக்ரான் வைரஸில் இருந்து ஒருவர் குணமடைந்து வீடு திரும்பியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

  Next Story
  ×