என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  உடுமலை-மூணாறு வனப்பகுதியில் உலா வரும் யானைகள்.
  X
  உடுமலை-மூணாறு வனப்பகுதியில் உலா வரும் யானைகள்.

  உடுமலை-மூணாறு சாலையில் உலா வரும் வனவிலங்குகள்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வனவிலங்குகளுக்கு தொந்தரவில்லாமலும் ஹாரன் அடிக்காமலும் செல்ல வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
  உடுமலை:

  திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இருந்துமூணாறு செல்லும் வழியில் 9/6 செக்போஸ்ட் உள்ளது.தமிழக எல்லையான இங்கு இருந்து கேரள மாநிலம் மூணாறு செல்லும் சாலை உள்ளது.

  இந்த வழியாக இரவு பகல் கனரக வாகனங்கள் மற்றும் காய்கறி ஏற்றி செல்லும் வாகனங்களும் சுற்றுலா பயணிகளும் இந்த சாலையை பயன்படுத்துகின்றனர். இந்த பகுதியில் தற்போது வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது, காட்டுமான்,கடமான், புள்ளி மான், காட்டெருமை,சிங்கவால் குரங்குகள் நடமாட்டம் உள்ளது. 

  குறிப்பாக யானைகள் உணவுக்காக குட்டிகளுடன் சாலையில் இரவு நேரங்களில் அதிகமாக நடமாடுகிறது.பருவமழையின் காரணமாக வனம் பசுமையாக மாறி உள்ளது. இதனால் கொசுக்கள் அதிகரித்துள்ளன. இந்த கொசுக்கடி தாங்க முடியாமல் யானைகள் பகல் மற்றும் இரவு நேரங்களில் சாலையோரத்திற்கு வந்து விடுகின்றன. 

  இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் ஆர்வமிகுதியால் இறங்கி இரவு நேரத்திலும் யானைகளை செல்பி எடுக்க முயல்கின்றனர். இது சில நேரங்களில் விபரீதமாக முடியும். எனவே வனவிலங்குகளுக்கு தொந்தரவில்லாமலும் ஹாரன் அடிக்காமலும் செல்ல வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். 

  வனவிலங்குகளை தொந்தரவு செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
  Next Story
  ×