என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கூட்டத்தில் பங்கேற்றவர்கள்.
  X
  கூட்டத்தில் பங்கேற்றவர்கள்.

  தளி பேரூராட்சி வார்டு மறுவரையறை குறித்த கலந்தாய்வு கூட்டம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வார்டு மறுவரையறை கருத்துருக்கள் 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் பார்வைக்காக வெளியிடப்பட்டுள்ளது.
  திருப்பூர்:

  திருப்பூர் மாவட்டம் தளி பேரூராட்சியில் ஏற்கனவே உள்ள 15 வார்டுகளிலிருந்து 17 வார்டுகளாக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த அரசாணை வார்டு மறுவரையறை கருத்துருக்கள் 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் பார்வைக்காக வெளியிடப்பட்டுள்ளது.

  ஆகவே தளி பேரூராட்சியின் வரைவு வார்டு மறுவரையறை கருத்துருக்களின் மீது ஆட்சேபனைகள் மற்றும் கருத்துகள் ஏதேனும் இருந்தால் அதுகுறித்த மனுக்களை தளி பேரூராட்சி உள்ளாட்சி அமைப்பின் மறுவரையறை அதிகாரி அல்லது மாவட்ட கலெக்டரிடம் வரும் 29-ந்தேதிக்குள் சமர்ப்பிக்கலாம்.

  மேலும் தளி பேரூராட்சியில் வெளியிடப்பட்ட வரைவு வார்டு மறுவரையறை கருத்துருக்கள் மீதான அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் பொது மக்களின் ஆட்சேபனைகள், கருத்துகளை நேரடியாக  கேட்கும் வகையில் மறுவரையறை ஆணையத்தின் உறுப்பினரும், பேரூராட்சிகளின் ஆணையருமான செல்வராஜ் தலைமையில் திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று கருத்துக் கேட்புக்கூட்டம்  நடைபெற்றது.

  இதில் பொதுமக்கள்  பங்கேற்று கருத்துக்களை தெரிவித்தனர். மேலும் பொதுமக்கள் அளித்த மனுக்கள் மீது உரிய விதிமுறைகளை பின்பற்றி தளி பேரூராட்சியின் வார்டு மறுவரையறை கருத்துருக்கள் மாநில மறுவரையறை ஆணையத்தால் இறுதி செய்யப்பட்ட பின்னர் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  Next Story
  ×