என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கைது
  X
  கைது

  மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் பயணிகளிடம் திருடிய பெண் உள்பட 2 பேர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் பயணிகளிடம் பணம் திருடியது தொடர்பாக பெண் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
  மதுரை:

  ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்துள்ள கோவிலாங்குளத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் மனைவி மணிமேகலை (23). இவர் நேற்று மதியம் மாட்டுத்தாவணி பஸ் நிலையத்திற்கு வந்தார். அவரிடம் பெண் ஒருவர் பணப்பையை பறித்துக் கொண்டு தப்ப முயன்றார்.

  அந்த பெண்ணை பொதுமக்கள் சுற்றி வளைத்து பிடித்தனர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் அந்த பெண் வவ்வால் தோட்டம் மலையாளத்தான் பட்டியைச் சேர்ந்த மணிவண்ணன் மனைவி சரிதா (30) என்பது தெரியவந்தது. அவரிடம் இருந்த பணப்பையை மாட்டுத்தாவணி போலீசார் பறிமுதல் செய்து சரிதாவை கைது செய்தனர்.

  ராமநாதபுரம் மாவட்டம், காவனூரை சேர்ந்த நாகு மனைவி தேவி (50). இவர் நேற்று மாலை மாட்டுத்தாவணி பஸ் நிலையத்துக்கு வந்தார். அப்போது ஒரு வாலிபர், தேவியிடம் இருந்த பணப்பையை பறித்துக் கொண்டு தப்ப முயன்றார். அவரை போலீசார் மடக்கிப் பிடித்தனர்.

  பழங்காநத்தம் மாடக்குளம் மெயின் ரோட்டை சேர்ந்த வினோத் (35) என்ற அந்த வாலிபரை மாட்டுத்தாவணி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
  Next Story
  ×