என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  மஞ்சப்பை விழிப்புணர்வுக்காக திருப்பூரில் தயாரிக்கப்பட்டு வரும் டி- சர்ட்டுகள், தொப்பிகள், மஞ்சள் பைகள்.
  X
  மஞ்சப்பை விழிப்புணர்வுக்காக திருப்பூரில் தயாரிக்கப்பட்டு வரும் டி- சர்ட்டுகள், தொப்பிகள், மஞ்சள் பைகள்.

  மஞ்சள்பை, விழிப்புணர்வு டி- சர்ட் தயாரிப்பு திருப்பூர் நிறுவனங்களில் குவியும் ஆர்டர்கள்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கொரோனா பரவலின் போது திருப்பூர் தொழில் துறையினர் முககவசம், கவச உடைகள் தயாரித்து சப்ளை செய்தனர்.
  திருப்பூர்:

  திருப்பூர் மாவட்டத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பனியன் நிறுவனங்கள்  உள்ளன. இங்கு உற்பத்தி செய்யப்படும் பனியன்கள் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

  உலக நாடுகள் பங்கேற்கும் கிரிக்கெட், கால்பந்து போட்டியாக இருந்தாலும் சரி, பல மாவட்ட இளைஞர்கள் பங்கேற்கும் ஜல்லிக்கட்டு போட்டியாக இருந்தாலும் சரி திருப்பூரில் இருந்துதான் ‘டி- சர்ட்’கள் தயாராகின்றன. 

  அரசியல் கட்சி மாநாடுகள், பல்வேறு அமைப்பினர் நடத்தும் விழாக்கள் என அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் திருப்பூரில் ‘டி -சர்ட்’ தயாரிக்கப்படுகிறது.

  கொரோனா பரவலின் போது திருப்பூர் தொழில் துறையினர் முககவசம் , கவச உடைகள் தயாரித்து சப்ளை செய்தனர். தற்போது பாலித்தீன் கவர்களுக்கு முடிவு கட்டும் வகையில் தமிழக அரசு ‘மீண்டும் மஞ்சப்பை’ திட்டத்தை அறிவித்துள்ளது. 

  இதையடுத்து முககவசம் ஆர்டர்கள் போன்று மஞ்சள் பைகளையும் திருப்பூரில் உள்ள ஒரு சில உள்நாட்டு பனியன் நிறுவனத்தினர் தயாரித்து கொடுக்க முன்வந்துள்ளனர். மேலும் மஞ்சள் பை விழிப்புணர்வு ‘டி -சர்ட்’களும் தயாரிக்க தொடங்கியுள்ளனர். 

  இதுகுறித்து திருப்பூரை சேர்ந்த டி-சர்ட் தயாரிப்பாளர் சுரேஷ் கிருஷ்ணா கூறியதாவது:-

  தமிழக அரசு பிளாஸ்டிக்கை ஒழிக்க கொண்டு வந்துள்ள இந்த இயக்கம் வரவேற்கத்தக்கது. மஞ்சப்பை இயக்கம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழக அரசு சார்பில் டி-சர்ட்டுகள் ஆர்டர்கள் கிடைத்தது.

  அதன்படி தயாரித்து கொடுத்தோம். இதன் பின்னர் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பலர் இந்த இயக்கத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் மஞ்சப்பை என்ற வாசகம் அடங்கிய டி-சர்ட்டுகள் தயாரித்து கேட்டனர். அதன்படி ஆர்டர்களை பெற்று தயாரித்து வருகிறோம்.

  தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆர்டர்கள் அதிக அளவில் வந்து கொண்டிருக்கிறது. சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தினமும் தொடர்புகொண்டு ஆர்டர்கள் கொடுக்கிறார்கள். 

  தமிழக அரசு ஏற்படுத்திய விழிப்புணர்வை தொடர்ந்து திருப்பூருக்கு டி-சர்ட் ஆர்டர்கள் தற்போது குவிந்து வருகிறது. 

  டி-சர்ட்டுகளை போல் தொப்பி, துணிப்பைகள் போன்றவையும் தயாரிக்கப் படுகிறது. தமிழக அரசின் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்கும் பலரும் டி-சர்ட்டை வாங்கி அணிய தொடங்கியுள்ளனர். 

  இதுபோல் பழவிற்பனை கடைகள் முதல் பல கடைகளில் இருந்து துணிப்பைகள் ஆர்டர்கள் வந்து கொண்டிருக்கின்றன. தமிழக அரசின் இந்த முயற்சி கட்டாயம் வெற்றி பெறும். மஞ்சப்பை இயக்கம் மூலம் விரைவில் பிளாஸ்டிக் பயன்பாடு ஒழிக்கப்படும் என்றார்.
  Next Story
  ×