search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தாறுமாறாக ஓடிய அரசு விரைவு பஸ் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.
    X
    தாறுமாறாக ஓடிய அரசு விரைவு பஸ் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.

    காங்கயம் பஸ் நிலையத்தில் தாறுமாறாக ஓடிய அரசு பஸ் மோதி வடமாநில தொழிலாளி காயம்

    சம்பவ இடத்திற்கு காங்கயம் போலீசார் சென்று விசாரணை நடத்தினர்.
    காங்கயம்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இருந்து மயிலாடுதுறைக்கு நேற்றிரவு அரசு விரைவு பஸ் புறப்பட்டது. காங்கயம் பஸ் நிலையத்திற்குள் வந்த போது திடீரென தாறுமாறாக ஓடிய பஸ், அங்கு நின்று கொண்டிருந்த வடமாநில தொழிலாளி ஒருவர் மீது மோதியது.

    இதில் அவரது 2 கால்களும் துண்டானது. இதையடுத்து டிரைவர், கண்டக்டர் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இதனால் ஆத்திரமடைந்த பயணிகள் மற்றும் பொதுமக்கள் அங்கு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.  

    இதையடுத்து சம்பவ இடத்திற்கு காங்கயம் போலீசார் சென்று விசாரணை நடத்தினர். மேலும் காயமடைந்த தொழிலாளியை மீட்டு சிகிச்சைக்காக காங்கயம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவருக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

    டிரைவர் கவனக் குறைவாக பஸ்சை ஓட்டி வந்ததால் விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து தலைமறைவான டிரைவர், கண்டக்டரை போலீசார் தேடி வருகின்றனர். 

    காங்கயம் பஸ் நிலையத்தில் புறநகர் போலீஸ் நிலையம் உள்ளது. ஆனால் போலீசார் இருப்பதில்லை. எனவே 24 மணிநேரமும் போலீசார் பணியில் ஈடுபட நடவடிக்கை எடுக்க வேண்டுமென பயணிகள் மற்றும் பஸ் நிலைய வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    Next Story
    ×