என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கோப்புபடம்
  X
  கோப்புபடம்

  பல்லடம் அருகே குட்டை பராமரிப்பு பணிக்கு பொதுமக்கள் எதிர்ப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கடந்த சில வாரங்களுக்கு முன் பொள்ளாச்சி ரோடு விரிவாக்கம் செய்யப்பட்டது.
  பல்லடம்:

  பல்லடம் அருகே பொள்ளாச்சி மெயின் ரோட்டில் செங்குட்டை என்ற பெயரில் குட்டை உள்ளது. மழை பெய்யும் நாட்களில் அருகே உள்ள பகுதிகளில் இருந்து இந்த குட்டையில் நீர் தேங்கும். மற்ற நாட்களில் இந்த குட்டை வறண்டு காணப்படும் .

  இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன் பொள்ளாச்சி ரோடு விரிவாக்கம் செய்யப்பட்டது. இதற்காக குட்டையில் இருந்து மணல் எடுக்கப்பட்டது. இதனால் தற்போது குட்டை கரடு முரடாக காணப்படுகிறது .

  இந்த நிலையில் பல்லடம் நகராட்சி நிர்வாகம் குட்டையை ஆழப்படுத்தி பராமரிப்பு செய்ய திட்டமிட்டுள்ளது. இந்தநிலையில் குட்டைப் பகுதிக்குள் பூங்கா அமைப்பதாகவும், பூங்கா அமைத்தால் நிலத்தடி நீர் ஆதாரம் பாதிக்கப்படும். 

  எனவே பூங்கா அமைக்க கூடாது என மாவட்ட கலெக்டரிடம் புகார் அளித்துள்ளனர். இது குறித்து நகராட்சி அதிகாரிகளிடம் கேட்ட போது, குட்டையில் பூங்கா அமைக்கும் திட்டம் எதுவும் இல்லை.

  குட்டையை ஆழப்படுத்தி, கரைகளை பலப்படுத்தவும், கரைகளின் ஓரம் பாதசாரிகள் நடந்து செல்ல பாதை அமைக்க மட்டுமே திட்டமிடப்பட்டுள்ளது. மற்றபடி குட்டைக்குள் பூங்கா அமைக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று தெரிவித்தனர்.
  Next Story
  ×