என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கோப்புபடம்
  X
  கோப்புபடம்

  நுகர்வோரிடம் கருத்துக்களை கேட்டு தயாரிப்பு பொருட்களை மேம்படுத்த வேண்டும்- கருத்தரங்கில் அறிவுறுத்தல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தொழில்முனைவோருக்கு படைப்பாற்றலும், புதுமைகளை புகுத்தும் திறன் மிகவும் அவசியமாகிறது.
  திருப்பூர்:

  தொழில்முனைவோர் மேம்பாட்டு பயிற்சி மையம் திருப்பூர் கிளை சார்பில் புதிய தொழில்முனைவோருக்கான விழிப்புணர்வு கருத்தரங்கம் ஆன்லைனில் நடந்தது. அதனை பயிற்சி மைய ஒருங்கிணைப்பாளர் முரளிதரன் தொடங்கி வைத்தார். ஈரோடு கொங்கு பொறியியல் கல்லூரி  பேராசிரியர் மோகனசுந்தரி பேசியதாவது:-

  தொழில்முனைவோருக்கு படைப்பாற்றலும், புதுமைகளை புகுத்தும் திறன் மிகவும் அவசியமாகிறது. கால மாற்றத்துக்கு ஏற்ப  தயாரிப்புகளை புதுப்பித்துவரும் நிறுவனங்களே வளர்ச்சியை நோக்கி வேகமாக நகர்கின்றன.

  தொழில் துவங்கும்போது மட்டும் புதுமையான தயாரிப்புகளை அறிமுகப்படுத்தினால் போதாது. உற்பத்தி பொருட்களில் தொடர்ந்து சிறு சிறு மாற்றங்கள் செய்ய வேண்டும்.தொடர்ந்து புதுமைகளை புகுத்துவதன்மூலம்  ஒரு நிறுவனம் காலம் கடந்து நிலைத்துநிற்கமுடியும்.

  சந்தை தேவை, நுகர்வோரின் எதிர்பார்ப்புகளை அறிந்து பொருட்களை உற்பத்தி செய்யவேண்டும். நுகர்வோரிடம் அவ்வப்போது கருத்துக்களை கேட்டு தயாரிப்பு பொருட்களை மேம்படுத்த வேண்டும்.

  நுகர்வோர் பொதுமக்களின் பிரச்சினைகளை கேட்டறியவேண்டும். இதன்மூலம் புதுமையான பொருட்களை உருவாக்குவதற்கான ஆலோசனைகள் பிறக்கும். இவ்வாறு அவர் பேசினார்.
  Next Story
  ×