என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கைது
  X
  கைது

  திருச்சி அருகே குட்கா விற்பனை செய்த வாலிபர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருச்சி அருகே குட்கா விற்பனை செய்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  திருச்சி:

  திருச்சி காந்திமார்க்கெட் நடுக்கல்லுகாரத் தெரு பகுதியைச் சேர்ந்தவர் மகேஸ் (வயது24). இவர் அந்த பகுதியில் பெட்டி கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவர் அந்த பகுதியில் அதிகமாக குட்கா பொருட்கள் விற்பனை செய்வதாக காந்தி மார்க்கெட் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின் அடிப்படையில் காந்தி மார்க்கெட் போலீசார் நடுக்கல்லூகாரத் தெரு பகுதியில் உள்ள அனைத்து கடைகளிலும் ஆய்வு செய்தார்கள். அப்போது மகேஸ் தன்னுடைய கடையில் மறைத்து வைத்திருந்த சுமார் 48 கிலோ எடை கொண்ட குட்கா பொருட்கள் போலீசாரிடம் சிக்கியது. பின்னர் காந்திமார்க்கெட் போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து வாலிபரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

  Next Story
  ×