search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருச்சி அரசு ஆஸ்பத்திரி ஒமைக்ரான் வார்டில் மேலும் 2 பேர் அனுமதி
    X
    திருச்சி அரசு ஆஸ்பத்திரி ஒமைக்ரான் வார்டில் மேலும் 2 பேர் அனுமதி

    திருச்சி அரசு ஆஸ்பத்திரி ஒமைக்ரான் வார்டில் மேலும் 2 பேர் அனுமதி

    திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் கடந்த 20 தினங்களில் 4 பேர் ஒமைக்ரான் வார்டில் சேர்க்கப்பட்டனர். ஏற்கனவே சிகிச்சை பெற்ற இருவர் குணமடைந்தனர்.
    திருச்சி:

    கொரோனாவில் இருந்து உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் சர்வதேச நாடுகளை மீண்டும் அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் 400-க்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வந்த 35-க்கும் மேற்பட்டோருக்கு ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இதையடுத்து பொதுஇடங்களில் மக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

    வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் தீவிர பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கட்டாய ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை நடத்தப்படுகிறது.

    இதில் கொரோனா உறுதி செய்யப்படும் நபர்கள் திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் உள்ள ஒமைக்ரான் சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இவர்கள் யாருக்கும் இதுவரை ஒமைக்ரான் உறுதி செய்யப்படவில்லை. திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் கடந்த 20 தினங்களில் 4 பேர் ஒமைக்ரான் வார்டில் சேர்க்கப்பட்டனர்.

    இதில் 2 வாரங்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்ட சிங்கப்பூர் பயணி 16 நாட்களுக்கு பின்னர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். முதன் முதலில் சேர்க்கப்பட்ட 56 வயதான அவருக்கு உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி, சிறுநீரக கோளாறு போன்ற இணை நோய்கள் இருந்தன. ஆனால் ஒமைக்ரான் அறிகுறி இல்லை.

    இணை நோய்கள் அதிகம் இருந்ததால் டாக்டர்கள் 24 மணி நேரமும் அவரை தீவிரமாக கண்காணித்து வந்ததாக டீன் வனிதா இன்று (சனிக்கிழமை) தெரிவித்தார். சிங்கப்பூர் பயணியைத் தொடர்ந்து 45 வயது ஆண் பயணி ஒருவரும் 15 நாட்களுக்கு பின் குணமடைந்து வீடு திரும்பினார். அவருக்கு இணை நோய்கள் எதுவும் இல்லை. மற்ற 2 பேரும் ஓரிரு தினங்களில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்கள் என டீன் உறுதி அளித்தார்.

    இந்த நிலையில் நேற்றைய தினம் 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் ஒமைக்ரான் வார்டில் சேர்க்கப்பட்டார். இவர் கடந்த 10 தினங்களுக்கு முன்பு வெளிநாட்டில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தார். பின்னர் மீண்டும் வெளிநாடு செல்ல ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோ தனை மேற்கொண்டபோது அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து ஒமைக்ரான் வார்டில் சேர்க்கப்பட்டார்.

    மேலும் 44 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரும் புதிதாக ஒமைக்ரான் வார்டில் சேர்க்கப்பட்டர். இவரும் சில தினங்களுக்கு முன்பு வெளிநாட்டில் இருந்து தமிழகம் திரும்பியவர் என டீன் வனிதா கூறினார்.
    Next Story
    ×