என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கைது
  X
  கைது

  மாணவியை கடத்திய கொத்தனார் போக்சோ சட்டத்தில் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  குடவாசலில் மாணவியை கடத்திய கொத்தனார் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்த போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
  குடவாசல்:

  நன்னிலம் அருகே உள்ள மகிழஞ்சேரி கிராமத்தை சேர்ந்தவர் அய்யப்பன்(வயது23). கொத்தனார். இவர் குடவாசல் பகுதியை சேர்ந்த 15 வயது மாணவியை கடந்த சில நாட்களுக்கு முன்பு கடத்தி சென்றுள்ளார்.

  இதுகுறித்து மாணவியின் தந்தை குடவாசல் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் குடவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாநிதி வழக்குப்பதிவு செய்து அய்யப்பனை பிடிக்க தனிப்படை அமைத்து தேடிவந்தனர்.

  இந்தநிலையில் அய்யப்பனும், மாணவியும் திண்டுக்கல்லில் இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் திண்டுக்கல்லுக்கு சென்று அங்கு இருந்த அய்யப்பன், மாணவி ஆகியோரை மீட்டனர். பின்னர் மாணவியை அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

  இதுகுறித்து போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து அய்யப்பனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
  Next Story
  ×