search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    பாலியல் குற்றங்களுக்கான தண்டனையை அதிகப்படுத்த வேண்டும் - காமராஜர் மக்கள் பாதுகாப்பு பேரமைப்பு வலியுறுத்தல்

    ஆசிரியர்களே கீழ்த்தரமான செயல்களில் ஈடுபடுவது மக்கள் மனதில் மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
    திருப்பூர்:

    பாலியல் குற்றங்களுக்கான தண்டனையை அதிகப்படுத்த வேண்டுமென காமராஜர் மக்கள் பாதுகாப்பு பேரமைப்பின் மாநில தலைவர் எஸ்.வி.பூமிநாதன் தமிழக முதல்வர் மற்றும் மத்திய சட்டத்துறை அமைச்சர் ஆகியோர்களுக்கு மனு அனுப்பியுள்ளார்.

    அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

    சமீபகாலமாக பள்ளி மற்றும் கல்லூரிகளில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் மீது பாலியல் சீண்டல்கள் மற்றும் வன்புணர்வு அதிகரித்து வருகிறது. பல்வேறு துறைகளில், வீதிகளில், குடும்பங்களில் என ஆங்காங்கே ஒருசில பாலியல் சீண்டல்கள் நடந்தாலும் அதிக அளவில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் நடப்பது வேலியே பயிரை மேயும் கதையாக இருக்கிறது.

    மேலும் ஆசிரியர்களே இதுபோன்ற கீழ்த்தரமான செயல்களில் ஈடுபடுவது மக்கள் மனதில் மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மாதா பிதா குரு தெய்வம் என நம் முன்னோர்கள் தெய்வத்திற்கு மேலாக ஆசிரியர்களை மதித்து வந்துள்ளனர். 

    சமுதாயத்தில் பெண் குழந்தைகள் சாலைகளில் நடந்து செல்ல மட்டுமல்ல, வாழ்வதற்கே தகுதியற்ற மாநிலமாக நம் தமிழ்நாடு மாறி விடுமோ? என்கிற அச்சம் நம்மில் எழுகிறது என்பதை எவராலும் மறுக்க முடியாது. 

    இப்பேர்ப்பட்ட அபாயகரமான சூழலிலிருந்து பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளை பாதுகாத்திட போக்சோ சட்டத்தில் திருத்தங்கள் செய்து கடுமையான தண்டனைகளை அளிப்பதன் மூலம் மட்டுமே பெண்கள் மற்றும்பெண் குழந்தைகள் மீதான பாலியல் சீண்டல்களை தவிர்க்க முடியும். 

    எனவே விரைவில் போக்சோ சட்டத்தில் திருத்தம் செய்து பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என தமிழக முதல்வர் மற்றும் மத்திய சட்ட அமைச்சர் ஆகியோர்களை கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.
    Next Story
    ×