என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  விபத்து
  X
  விபத்து

  தஞ்சை அருகே கார் மோதி விவசாயி பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தஞ்சை அருகே நெடுஞ்சாலையை கடக்க முயன்ற விவசாயி மீது கார் மோதிய விபத்தில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
  வல்லம்:

  தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள உதாரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ராஜா (வயது 40) விவசாயி. இவர் செங்கிப்பட்டி அருகே உள்ள நந்தவனப்பட்டியில் ஒரு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பின்னர் மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். அப்போது தஞ்சை திருச்சி தேசிய நெடுஞ்சாலை முத்தாண்டிப்பட்டி ஆர்ச் அருகே வந்தபோது மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் தீர்ந்து நின்று விட்டது. இதனையடுத்து மோட்டார் சைக்கிளை சாலையோரத்தில் நிறுத்தி விட்டு தஞ்சை திருச்சி தேசிய நெடுஞ்சாலையை நடந்து சென்று கடக்க முயன்றார்.

  அப்போது திருச்சியில் இருந்து தஞ்சை நோக்கி வந்த கார் திடீரென ராஜா மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ராஜா சம்பவ இடத்திலேயே பலியானார் . இதுகுறித்து தகவலறிந்த செங்கிப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ராஜாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் . இதுகுறித்து விபத்தில் பலியான ராஜாவின் மனைவி லதா கொடுத்துள்ள புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
  Next Story
  ×