search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    கொல்லம் சிறப்பு ரெயில் திருப்பூரில் நிற்காமல் செல்வதால் அய்யப்ப பக்தர்கள் கவலை

    காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோட்டில் நிற்கும் ரெயில் திருப்பூரில் நிற்காமல் கோவைக்கு பயணிக்கும்.
    திருப்பூர்:

    ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் இருந்து கேரள மாநிலம் கொல்லத்துக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் இன்று இரவு 11:45க்கு கொல்லம் வந்து சேரும். மறுமார்க்கமாக நாளை 26-ந் தேதி மதியம் 2:30க்கு புறப்படும் ரெயில், மறுநாள் காலை 5:30 மணிக்கு காக்கிநாடா சென்றடையும். 

    காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோட்டில் நிற்கும் ரெயில் திருப்பூரில் நிற்காமல் கோவைக்கு பயணிக்கும். 3 ஏ.சி., பெட்டி, 10 படுக்கை வசதி, 6 முன்பதிவு என 21 பெட்டிகளுடன் சிறப்பு ரெயில் இயங்கும். அய்யப்ப பக்தர்கள்  வசதிக்காக சிறப்பு ரெயில் அறிவிக்கப்படும். 

    ஆனால் இதுவரை அறிவித்த 2 ரெயில்கள் திருப்பூரில் நிற்காத நிலையில் தற்போது அறிவிக்கப்பட்ட ரெயிலும் திருப்பூரில் நிற்காமல் ஈரோட்டில் இருந்து கோவைக்கு செல்லும் என்ற அறிவிக்கப்பட்டு உள்ளது பக்தர்களை கவலை அடைய செய்துள்ளது.
    Next Story
    ×