என் மலர்
உள்ளூர் செய்திகள்

கைது
நன்னிலம் அருகே முதியவரை தாக்கிய தொழிலாளி கைது
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே முதியவரை தாக்கியது தொடர்பாக தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
நன்னிலம்:
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அடுத்துள்ள கோவிந்தசேரி அய்யனார் கோவில்தெருவை சேர்ந்தவர் நாராயணசாமி (வயது 50) கூலி தொழிலாளி. இவரது பேரனை அதே பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் கிண்டல் செய்துள்ளார்.
இதில் ஆத்திரம் அடைந்த நாராயணசாமி ராஜேந்திரனை தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த ராஜேந்திரன் திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து ராஜேந்திரன் கொடுத்த புகாரின் பேரில் பேரளம் போலீசார் வழக்குபதிவு செய்து நாராயணசாமியை கைது செய்தனர்.

Next Story