என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  தற்கொலை
  X
  தற்கொலை

  பள்ளிபாளையம் அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பள்ளிபாளையம் அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  பள்ளிபாளையம்:

  பள்ளிபாளையம் அருகே உள்ள ஆவத்திபாளையத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவருடைய மனைவி பத்மா (வயது 46). சுப்பிரமணி இறந்து விட்டதையொட்டி பத்மா பூ வியாபாரம் செய்து வந்தார். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இதில் மகளுக்கு திருமணமாகி விட்டது.

  மகன் சமீபத்தில் காதலித்து திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. மகனின் காதல் திருமணத்தில் விருப்பம் இல்லாத பத்மா மன உளைச்சலில் இருந்து வந்ததாக தெரிகிறது.

  இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பத்மா வீட்டில் உள்ள விட்டத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

  இதுகுறித்து அவருடைய மகள் ஜிவிதா பள்ளிபாளையம் போலீசில் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
  Next Story
  ×