என் மலர்
உள்ளூர் செய்திகள்

போராட்டத்தில் பங்கேற்றவர்கள்
கவர்னருக்கு தபால் அனுப்பும் போராட்டம்
பயங்கரவாத அமைப்புகளை தடை செய்யக்கோரி கோஷம் எழுப்பினர்.
திருப்பூர்:
பயங்கரவாத அமைப்புகளை தடை செய்ய வலியுறுத்தி சிவசேனா கட்சி சார்பில் தமிழக கவர்னருக்கு தபால் அனுப்பும் போராட்டம் திருப்பூரில் இன்று நடைபெற்றது.
திருப்பூர் ரெயில் நிலையம் அருகே உள்ள ஆர்.எம்.எஸ். தபால் நிலையம் முன்பு நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு சிவசேனா இளைஞரணி மாநில தலைவர்அட்சயா திருமுருக தினேஷ் தலைமை தாங்கினார்.
இதில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் பயங்கரவாத அமைப்புகளை தடை செய்யக்கோரி கோஷம் எழுப்பினர். பின்னர் கோரிக்கை அடங்கிய தபால் அட்டைகளை கவர்னருக்கு அனுப்பினர்.
Next Story